Skip to main content

அடையாரில் ஓர் அழுகை


சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருகிறது ,ஆம்  சாலைகள் எங்கும் ஹாரன் சத்தம் , இடைவிடாத போக்குவரத்து நெரிசல் , ரோட்டின் ஓரம் பூக்கடை வாசம் , டாஸ்மாக் முழுதும் அதே அடிதடி சண்டை , இவற்றை கண்டுகொண்டே கடந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம்.

கிண்டியின் வழியே அடையாறுக்கு ஒரு பயணம் , வழியெங்கும் இன்னும் தூர்வாரபடாத குப்பைகள் , அந்த பகுதி மக்களுக்கோ , இல்லை அதே வழியில் பயணிக்கும் வாகனவாசிகளுக்கோ   அது புதிதல்ல பல ஆண்டுகளாக இன்னும் மாறாத அதே நிலை , என்ன இந்த முறை மழை என்ற பெயரில் கொஞ்சம் அதிகம் அவ்வளவே...

வண்டியை ஓரம் கட்டிவிட்டு கொஞ்சம் மெதுவாக நடந்தேன் . கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரோ ஒருவர் சோகமான முகத்துடன் , ஆழ்ந்த சிந்தனையில் தனிமையை தனக்கானாதாய்  கொண்டிருந்தார்.

அருகில் சென்று "அண்ணே என்ன ஆச்சு" என்று கேட்க தோன்றியது.இருந்தும் ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்தது. உண்மையில்  தான் யார் என்றே தெரியாத ஒரு நபரிடம் என்னவென்று பேசுவது.

எப்படியோ மனது ஒரு நிலைக்கு வந்த பிறகு அவர் அருகில் சென்றேன்.

"அண்ணே என்ன ஆச்சு , சாப்பாடு எதாவது வேணுமா " என்றேன் .

அவர் " மெல்ல சிரித்துவிட்டு , அதெல்லாம் ஒன்னுமில்லப்பா  , காலேஜ் பசங்க கொஞ்ச பேர் வந்து இப்ப தான் கொடுத்துட்டு போனாங்க " என்றார் .

சரி அண்ணே  , என்று சொல்லிய என் உதடுகள் , மேலும் பேச துடித்து "வேற எதாவது உதவி வேணுமா அண்ணே " என்றது .

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , முப்பது வருசத்துக்கு முன்னாடி எப்படி மெட்ராஸ் வந்தனோ அப்படியே ஆகிட்டேன் ,

என்ன "அப்ப நான் மட்டும் இருந்தேன் இப்ப ரெண்டு குழந்தைகள் , அப்புறம் என் பொண்டாட்டி  அவங்களும் என்ன நம்பி இருக்காங்க.

சரி விடு விதி யார விட்டுச்சு" என்றார் வேதனை நிரந்த குரலுடன்.

என்ன வேலை பாத்துட்டு இருந்திங்கனே , என்றேன்

மளிகை கடை வச்சிருந்தேன்பா , இப்ப எல்லாம் போய்டுச்சு

முப்பது வருசத்துக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாம மெட்ராஸ் வந்தேன்.

மளிகை கடைல வேலைக்கு சேர்ந்து , கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு , பத்து வருஷம் கலுச்சுதான் சொந்தமா ஒரு கடை போட்டேன்.

அதுவும் வாடைகைக்கு தான் , அப்புறம் கல்யாணம் , கொஞ்சம் நாள் என் பொண்டாட்டி வேலைக்கு போனா.

மொத குழந்த பொறந்ததுக்கு அப்புறம் நானே வேணாம் இன்னு சொல்லிட்டேன்.

கொஞ்சம் கொஞ்சமா மேல வந்தோம் , "ரெண்டும்  பொட்டபுள்ள வேறைய" அதுனால அப்ப அப்ப கொஞ்சம் நகை மட்டும் எடுத்து வச்சிருந்தோம்.

லாஸ்ட் அஞ்சு வருசமாவே கடைல ஒன்னும் வருமானம் வேற இல்ல , எல்லாரும் ஏதோ ஆன்லைன் ல வாங்குறாங்கஇன்னு  சொல்றாங்க.

போன மாசம் தான் வீட்ல பேசிட்டு இருந்தோம் , இருக்கிற நகைய வச்சு மொத புள்ளைக்கு கல்யாணம் பண்ணலாம் இன்னு , சேர்த்து வச்ச நகை மொத்தமும் போச்சு ...

கடைல ஒரு பொருள் இல்ல , எல்லாமே போயிருச்சு

வாடகை வீடுதான் இருந்தாலும் எதோ கொஞ்சம் நல்ல படியா பொருள் வாங்கி வச்சிருந்தோம் , இப்ப உள்ள போய் பாத்தா எதையும் காணோம்..

முப்பது வருசத்துக்கு இருந்த தெம்பும் இப்ப இல்ல , ஒன்னும் புரியலப்பா .

கடன் வாங்கி மறுபடியும் கடை போட்டு நல்ல தரமான பொருள வித்தாலும்  யாரும் இங்க வர மாட்டங்க , அது தான் ஆன்லைன்ல எல்லாமே கிடைக்குதே...

சரிப்பா , நான் வரேன் என்றவாரே ... மெல்ல நகர்ந்தார்..

மொத்தகதையையும்  கேட்டதும்

என் கண்களுக்குள் ஏதோ நீர் சுற்றி கொண்டது ...
வெளியில் வர துடித்து கொண்டிருந்தது..

எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்..

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!
இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.
பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.
தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.
உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.
எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!
காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.
திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!
ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?
இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.
எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.
உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?
தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் …

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண்ணை போல ஆசையில் அ…

இரவு நேர இரயில் பயணம்

அரைகால் சட்டையுடன்
மீசை வலித்து
குறுந்தாடியுடன்
அகோர முகம் அயல் நாட்டவன்
விட்டு சென்ற
அரைகுறை விந்தனுவில்
பிறந்தவன் போலும் பெண்ணை கண்டிராத
அவன் கண்களும்
காமத்தால் சுழன்றன அவனது வாய்பேச்சில்
வயதோரும் வாயடைத்து
சிரித்தனர் அவளும் சிரித்தாள் அவனை பற்றி எழுதிய என் விரல்கள்
அவளை பற்றியும்
எழுத துடித்தது உண்மையில் நான் அவளை சரியாக ரசிக்கவில்லை
காரணம்
அவள் அவனை
ரசித்து கொண்டிருந்தால் இருந்தாலும் நான் என் பணியை செய்தேன்
அவளின் இமை அசைவில் அவள் அழகியென்ற ஆங்காரம் அவள் இதழ் சிரிப்பில் கொஞ்சம் சிலிர்த்து தான் போனது என் நெஞ்சம் கை விரலும் கதை பேசும்
கண் அசைவும் கவிதை பாடும் அவளை நேர்கொண்டு ரசித்திருந்தால்
கவிதையாய் வர்னித்து இருப்பேன் அசதியின் காரணமோ என்னவோ என் எதிரே அவள் இருந்தும் என் விழிகள் அவளை காணாமல் சுருங்கியது - இரவு நேர இரயில் பயணம்