ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம். மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது. இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி. அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம். நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம். பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை. கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை. உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. நந்...