Skip to main content

‪மெளனமான‬ ‪நினைவுகள்‬-1



ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம்.
மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது.
இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி.
அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம்.
நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம்.
பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை.
கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை.
உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.
நந்தினி கிராமத்து பெரியார் என்றால் , ஐஸ்வர்யா நகரத்து அம்பேத்கர் அப்படிதான் வர்ணிக்க வேண்டும் அந்த இரண்டு அடாவடிகளையும்.
எப்படியோ தேர்வு முடிவுகள் இன்று வரும் நாளை வரும் என்று நட்பு வட்டங்களால் கிளப்பி விடப்பட்ட செய்திகளால் , கொஞ்சம் பயந்தும் , நிறைய சிரித்தும் விழிகளை நீரால் நிரப்பிக்கொண்டோம்.
முடிவாக நடுநிசியில் வெளியானது தேர்வு முடிவுகள். என்னிடமோ , தீலிப்பிடமோ , சலீமிடமோ கைபேசிகள் அதுவரை கிடையாது.
குமார் என்ற நடுத்தர நண்பனின் உதவியோடு எப்படியோ தேர்வு முடிவை பாரத்துவிட்டோம்.
ஆம் நினைவிருக்கிறது , மனதில் பதிந்த என்றும் நினைவிழக்கா நினைவுகள் அவை.
நான் தான் எங்கள் ஐவரின் தேர்வு முடிவுகளை முதலில் பார்த்தேன் , அதோடு சேர்த்து ஆறாவதாக அவளின் தேர்வு முடிவையும்..
அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மகிழ்ச்சியில் நடுநிசி என்றும் பாராது துள்ளிக்குதித்து கொண்டிருந்தனர்.
நான் மட்டும் தனிமையில் அவளை பற்றி நினைத்தவனாய்
நிலவை ரசித்துக் கொண்டிருந்தேன்.
யார் அவள்?

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...