Skip to main content

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!



நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.

பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.

தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.

உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.

எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!

காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.

திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!

ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?

இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.

எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.

உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?

தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் , இந்து தீவிரவாதத்தை இந்திய அளவில் விவாத பொருளாக்குகிறீர்.

உம் நற்பணி இயக்க தோழர்களோடு நீவிர் மக்களுக்கு செய்த பணிகளை இம்மக்கள் அறிவர்.

40 ஆண்டு காலம் ஓர் இயக்கத்தை கட்டுக்கோப்போடு வளர்ப்பதென்பது சாதாரண காரியமல்ல , அப்போதே அரசியலை கற்க ஆரம்பித்துவிட்டீர்.

சரியாக வரி கட்டும் கலைஞன் என்ற முறையில் சாமானிய மக்கள் மனதிலும் என்றோ இடம் பிடித்துவிட்டீர்.

ஓட்டிற்கு பணம் வாங்கியே பழக்கப்பட்ட எங்களிடம் , நீங்கள் கட்சி நடத்த நிதி கேட்டது ஆச்சிரியத்தையும் மாற்று அரசியலுக்கான ஓர் பாதையையும் தெளிவாய் எங்கள் கண் முன் காட்டியது.

ஊழலில்லா தேசத்தை உருவாக்குவேன் என்று சொல்லி தோற்றுப்போன அரசியலுக்கு மத்தியில், எங்களுக்கு உங்கள் பேச்சும் மற்றுமொரு நம்பிக்கை தான்.

இருந்தும் ஓர் சாமானியனாய் உங்களிடம் இப்போது இருக்கும் கேள்விகள் ?

நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக எப்போது துவங்குவீர்கள் ?

ஓட்டு வங்கி அதிகம் உள்ள திராவிட கட்சிகளுடன் தன் பேச்சை மாற்றிக்கொண்டு கமல் இணைவாரா ?

தமிழகம் எதிர்த்திடும் மத்திய கட்சியோடு ஓர் அங்கம் வகிப்பாரா கமல் ?

பட்டுப்போகும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாயகனின் பிரவேசம் துளிர் விடுமா ?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் இருந்து அரசியல் களம் கண்ட பலரில் வெகு சிலரே அரியணையில் அமர்ந்துள்ளார்கள்.

நம் சண்டியரும் தனி ஆளாய் , திகட்டா கொள்கை கொண்டு விஸ்வரூபம் எடுத்து வெகு விரைவில் அரியணை ஏற்வாறா ?

#சாமானியனின்_கேள்விகள்

Comments

Popular posts from this blog

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...