திட்டமிடல்
ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல் இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் .
எதிர்பார்ப்பு
சரியாக திட்டமட்ட பல தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள் சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் .
எல்லையில்லா கனவு
இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு ஒரு எல்லைகோட்டை தீர்மானித்துவிட்டு தான் தொழில் துவங்க வருகிறார்கள் . சரியான பார்வை கொண்ட தொழில்முனைவோர்கள் எல்லையில்லா கனவை தம்மனதுக்குள் கற்பனையில் ஓட விட்டு கொண்டே இருப்பார்கள் . செங்கல்பட்டில் கிராமத்தில் இருந்தாலும் செவ்வாய் கிரகத்தில் தொழில் துவங்க நினைப்பார்கள் . இங்கு பல வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள் எல்லையில்லா கனவிற்கு சொந்தகாரர்கள் தான்.
போட்டி
பொதுவாக தொழில் முனைவோரில் இரண்டு வகை உண்டு ஒன்று புதிதான சிந்தனையை முதலாக தொடுப்பது . மற்றொண்டு இருக்கின்ற சிந்தனையை உள்வாங்கி செய்வது . இவற்றில் முதல் வகையினர் பெரும்பாலும் சிரமமின்றி வெற்றியை ருசிப்பார்கள் , இரண்டாம் வகையினருக்கு நிச்சயம் போட்டிகள் பலவாறு வந்து கொண்டே தான் இருக்கும். அதை எதிர்கொண்டு வெற்றி பெற நிச்சயம் அவர்கள் அவர்களின் ஆளுமையை வளர்த்து கொள்வது அடிப்படை தேவையாகும் .
அணியின் தரம்
மேற்கண்ட அனைத்தும் தனிப்பட்ட ஒரு நபர் சார்புடையது ஆனால் அணி என்பது ஒரு குழுவை வடிவமைப்பது . நிர்வாக திறன் கொண்ட ஓர் அணியை கட்டமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல பல தோல்வி அடைந்த தொழில்முனைவோர்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் நிச்சயம் அவர்களுக்கு பின்னால் தரமில்லா அணியின் பங்கு மிகமுக்கியமாக செயல்பட்டிருக்கும்.
சந்தைபடுத்துதல்
தெளிவாக திட்டமிட்டு , எதிர் பார்பில்லா கனவை கொண்டு , கட்டமைத்த அணியையும் பெற்றுவிட்டால் வென்றுவிடலாம் என்று நினைப்பதே தொழில்முனைவோரின் குறுகிய கால வீழ்ச்சிக்கு முழுமுதல் காரணம். இவை அனைத்தையும் பெற்ற பின்பு தான் தொழில்முனைவோருக்கான பணியே துவங்குகிறது . சந்தைபடுத்தல் மட்டும் தான் எந்த ஒரு தொழிலுக்கும் முதுகெலும்பு . அதை திறம் பட செய்துவிட்டால் வெற்றியை ஒருவகையாக ருசித்து விடலாம்.
Comments
Post a Comment