பொறியியலுக்கு பின் ஒவ்வொரு பொறியாளனும் சொல்ல முடியா மனக்குமுறல்களை மனதிற்குள் புதைத்துவிட்டு , வெள்ளேந்தியான சிரிப்பை மட்டும் வெளிச்சமாய் காட்டுகிறான்.
தான் எதற்கு தகுதியானவன் என்பதை தரம் காண்பதற்கு மட்டுமே அந்த நான்கு வருட பொறியியல் பயணம் அவனை தாரைவார்த்து கொள்கிறது.
அரசு கல்லூரியில் படித்தவனுக்கும் , அயல் நாட்டு தோரனையில் படித்தவனுக்கும் இது பொருந்தாத கூற்றுதான் . ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரி முடியும் முன்னே கனகச்சிதமாக கணிக்கபட்டுவிடும்.
பாவம் இதில் பரிதாபத்திற்க்கு உள்ளாபவர்கள் இரண்டாம் நிலை கல்லூரியில் படித்த இயலா வர்க்கம் தான்.
இயலா வர்க்கத்தின்
வாரிசுகள்தான் இயன்றதை செய்து கொண்டு இன்றளவும் சென்னையை வலம் வருகின்றார்கள் . நிச்சயம் இனியும் வலம் வருவார்கள்.
வாரிசுகள்தான் இயன்றதை செய்து கொண்டு இன்றளவும் சென்னையை வலம் வருகின்றார்கள் . நிச்சயம் இனியும் வலம் வருவார்கள்.
இந்த இயலா வர்க்கத்தின் இயந்திரவியல் பொறியாளனோ மூன்று வேளை உணவிற்க்கு தினக்கூலியாய் அந்த அயல்நாட்டு தோரனைக்கு அடி பணிந்து அடிமையாய் உழைக்கிறான்.
கணிணிஅறிவியல் படித்தவனோ training என்ற பெயரில் கால்காசு வாங்காமல் கலூன்ற வழியின்றி அதையே நினைத்து தவிக்கிறான்.
இரு பிரிவினருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை தன் அன்னையிடம் சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லும் அந்த பொய்யான வார்த்தை தான் .
Comments
Post a Comment