ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது.
நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும்.
நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல.
பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான்.
ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர்.
ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும்.
அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநிலை வர்க்கங்களுக்கு இல்லை என்ற பதிலே முடிவாய் முற்றும் பெறும்.
உண்மை தான் விளையாட்டில் பிரிவினை வந்து பல ஆண்டுகள் ஆகிறது அதை வைத்துதான் இங்குள்ள அரசியலும் நாடகம் போடுகிறது.
ஆனால் அது மட்டும் தான் காரணமா என்றால் பதில் இல்லா வினா தான் அது.
இங்குள்ள அனைவரும் குற்றாலீஸ்வரனை பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருப்போம்.அச்சிறுவயதில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்த நீச்சல் வீரர்.
பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை தத்தெடுக்க தலைகீழாய் நின்றது.
நம் நாட்டை தவிர , நடுநிலை குடும்பத்தில் பிறந்து முடிந்தவரை போராடி ஒரு கட்டத்தில் தன் கனவையும் கண்ணீருக்குள் மூழ்கடித்த நீச்சல்வீரன் இப்போதைய மென்பொறியாளன்.
நம் நாட்டை தவிர , நடுநிலை குடும்பத்தில் பிறந்து முடிந்தவரை போராடி ஒரு கட்டத்தில் தன் கனவையும் கண்ணீருக்குள் மூழ்கடித்த நீச்சல்வீரன் இப்போதைய மென்பொறியாளன்.
ஒருவேளை அன்று அவனை ஆதரரித்திருந்தால் , அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தால் இந்தியாவிற்க்கும் ஒரு பிலிப்ஸ் கிடைத்திருப்பான்.
இது போன்று கண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் கனவுகள் நம் நாட்டில் ஏராளம்.
ஓடி விளையாண்ட தலைமுறைகள் அழிந்து வியர்ப்பது வியாதி என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
ஐந்து வயது சிறுவன் கூட ஆன்ட்ராய்ட் மொபைலில் தான்
விளையாட்டை ஆடுகிறான்.
விளையாட்டை ஆடுகிறான்.
அதை பார்க்கும் நம் பெற்றோரும்
சந்தோஷத்தில் திளைத்து போகின்றனர்.
சந்தோஷத்தில் திளைத்து போகின்றனர்.
நம் நாட்டில் இரண்டு வயதில் ஒரு குழந்தை அடி எடுத்து வைக்கிறது என்றால் அதன் இருபது வயது வரை படிப்புக்களை தரவாரியாய் பிரித்து வைத்திருக்கின்றனர்.
பிறகு எங்கு ஒலிம்பிக்கில் பதக்கங்களை பறிப்பது..
விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகள் இங்கு எத்துனை ?
விளையாட்டால் தான் இந்த மாணவன் படிப்பில் குறைவாய் மதிப்பெண் எடுக்கிறான் என்று குறைகூறும் குருமார்கள் இங்கு எத்துனை ?
விளையாட்டு வகுப்பை கையகப்படுத்தி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் எத்துனை ?
கேள்விகள் ஆயிரம் கேட்கலாம் அதற்கான பதில் நம்மிடம் மட்டுமே உள்ளது. இனியாவது மாறுவோம்.
கனவுகள் தோற்கலாம்
காலங்கள் மாறலாம்
காலங்கள் மாறலாம்
நிழல்களை கடந்துதான்
நிஜம் அதை வென்றிடு...
நிஜம் அதை வென்றிடு...
உடல்களும் சோரலாம்
உணர்வது உறங்களாம்
உணர்வது உறங்களாம்
உண்மையில் நீ கண்ட
கனவதை மாற்றலாம்...
கனவதை மாற்றலாம்...
வெறிகொண்டு ஆடிடு
முதல் அடி தகர்த்திடு
முதல் அடி தகர்த்திடு
குறி கொண்டு நோக்கினால்
உலகமும் திரும்பிடும்...
உலகமும் திரும்பிடும்...
இவ்வரிகளோடு கலைகிறது சாமானியனின் ஆதங்கம்.
Comments
Post a Comment