நான்கு ஆண்டுகள் , ஆம் எனக்கு நினைவிருக்கிறது.
கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது.
கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது.
நான் ராம்.பள்ளி எனும் இடுகுழியிலிருந்து தப்பித்து பொறியியலில் தலைநுழைத்த முற்போக்காளன்.
கல்லூரி வாசல் தான் பல புள்ளி கோலமாய் என்னை புதிய கோட்டிற்க்குள் இணைத்தது.
கணிணி அறிவியல் என்பதால் பெண்களுக்குள்ளான பாகுபாடை மறந்து சமநிலை உணர்வை முதல்நாளே அவ்வகுப்பறை என் மனதில் பதித்தது.
நான் மட்டுமல்ல என்னுடன் முதல் நாள் நட்பான தீலிப்பிற்க்கும் , சலீம்மிற்க்கும் அதே மனநிலை தான்.
அரட்டைகள் அரங்கேற்றமாகின , சிரிப்பிற்க்கு பஞ்சமில்லா காலமது. வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை கண்ணெதிரே கண்டு குதூகளித்து கொண்டிருந்தோம்.
மூவராய் சிரித்த உதடுகள் ஐந்தாகி போனது ஒரே மாதத்தில். நந்தினி என்ற நல்லவளும் , ஐஸ்வர்யா என்ற அடாவடியும் எங்கள் கைகளோடு விரல் கோர்த்த தருணம் அது , உண்மையில் நினைத்தாலே மனமெல்லாம் மழைச்சாரல் தெளிக்கிறது.
நான்கு தலைகள் கல்லூரி விடுதிக்குள்ளும் , நந்தினி என்ற நல்லவள் மட்டும் வீட்டிற்க்குள்ளும் அடைக்கலமாய் அடைந்து கிடந்தோம்.
வகுப்பறை தான் எங்கள் சொர்க்கவாசல் , தினமும் ஏதாவது அடாவடி செய்து மனங்களை சிரிப்பால் வருடிக்கொடுப்போம்.
வகுப்பறைக்குள்ளே அடித்துக்கொண்டு முடித்திடுவோம் நந்தினியின் மதிய உணவை , பின் கேன்டீனுக்குள் சென்று வேண்டியதை கணக்கின்றி கொறித்திடுவோம்.
பாகுபாட்டை நாங்கள் பழகிய வரை அறிந்தது கிடையாது. பாசமென்ற சுகத்தை அதுவரை அதுபோல் உணர்ந்தது கிடையாது , நினைவில் உள்ள நினைவிழந்த தருணங்கள் அது.
காலங்கள் கரைந்தோட முதல் செமஸ்ட்டர் தேர்விற்க்கான தேதிகள் ஒட்டப்பட்டது. கல்லூரியில் நாங்கள் எழுதும் முதல் தேர்வு என்பதால் அனைவரின் மனதிலும் பயமும் சேர்ந்தே ஒட்டிக்கொண்டது.
பயத்தின் இறுதிநாளில் ஒர் பயண ஏற்பாடு , பெரியதாய் ஒன்றுமில்லை அருகிலிருந்த மலைக்கோவில் தான், என்றாலும் முதல்முறை என் நண்பர்களோடு ஓர் பயணம் வெளிவட்டார பயணம்.
கோவிலும் சாதிகள் இல்லா சுற்றுலா தலமாய் அன்று தான் என் கண்களுக்கு தெரிந்தது. அக்கோவிலின் படிக்கரையில் அமர்ந்தபடி எதற்க்கும் உதவாத பல விஷயங்களை நிறையவே பேசினோம். சிரித்தோம். சிலிர்த்தோம். நட்பெனும் இறக்கைகளை வானுயர விரித்தபடி பயணத்தில் திளைத்தோம்.
ஒரு வார விடுமுறைக்கு பின்...
Comments
Post a Comment