விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...