"ஏன்டா , எப்ப பாத்தாலும் மூஞ்சிய உர்ன்னு வச்சுக்கிர "
" அடிப்பாவி , என் மூஞ்சியே அப்படி தான் டீ "
"இல்ல , இல்ல நான் உன்ன சைட் அடுச்சப்ப உன் மூஞ்சி அழகா இருந்துச்சு"
"ஓ , இப்ப நான் அழகா
இல்லையா ? "
இல்லையா ? "
" அப்படி சொல்லல , but கொஞ்சம் மொக்கையா தா இருக்க , என்னய ஏன்டா லவ் பண்ணுன ? "
"தீடிர்ன்னு கேட்டா , என்ன சொல்றது , அழகா இருந்த லவ் பண்ணுனேன் "
" ஓ கோ , அப்ப நான் அழகா இல்லைனா லவ் பண்ணிருக்க மாட்ட ? "
" சத்தியமா , திரும்பி கூட பாத்திருக்க மாட்டேன் "
"அடப்பாவி , சரியான fraud டா நீ "
" ஆனா , இனி உன் அழகு உன்ன விட்டு போனா கூட நான் போக மாட்டேன் டீ செல்லகிராதகி "
"பார்ரா , ஹம்ம்ம்ம் , நீ நடத்து , என்ன ஏன்டா புடிக்கும் ? "
" எப்ப பாத்தாலும் சிரிச்சுக்கிட்டு , ஏதாவது தொனத்தொனன்னு பேசிக்கிட்டு , அப்ப அப்ப அழுதுக்கிட்டு , நீ நிஜமாவே என் அழகி தான்டீ "
"லவ் யூ டா கிராதகா "
"சரி , என்ன ஏன் லவ் பண்ணுண ? "
"நான் எங்க பண்ணுனேன் , கூட இருக்க friends தா சும்மா try பண்ணி பாரு , பிடிக்கலைன்னா கழட்டிவிட்டுடு ன்னு சொன்னாங்க , அது தான் பண்ணுனேன் "
"அடிப்பாவி , அப்ப என் மேல லவ் feel யே வரலையா ? "
"ஓ , வந்துச்சே "
"எப்ப ? "
" உன்ன first டைம் பாத்தப்ப , அப்ப விழுந்தவ தான் , இன்னும் எழுந்திருக்கில , செம அழகன் டா நீ , என் கண்ணுக்கு மட்டும் "
" ஓ , அப்ப மத்தவங்க ,
கண்ணுக்கு ? "
கண்ணுக்கு ? "
" மத்த , எல்லார் கண்ணுக்கும் நீ அசிங்கமா தான் தெரியனும் , உன்ன நான் மட்டும் தான் ரசிக்கனும் , என் கண்ணுக்கு மட்டும் தான் நீ அழகா தெரியனும் "
"லவ் யூ டி கிராதகி"
Comments
Post a Comment