Skip to main content

‪பனியெனும்‬ ‪‎உருவம்‬

யாருமில்லா சாலையில்
அந்திமங்கும் இராத்திரியில்
என்னை மட்டுமே பின்தொடரும் உடலில்லா ஒர் உருவம்..
என்னவனோடு கொஞ்சி உறவாடும் நேரத்தில் , 
இவ்வுறுவம் என்னை இப்படி நடுநடுங்க வைக்கிறதே
அவ்வுறுத்தை கண்ட
என் வியர்வை சுரப்பிகள்
முதலில் சண்டையிட துடித்து
வேகமாக எழுந்தது.
பின் தோல்வியில் துவண்டதாய்
என் உடலுக்குள்ளே அடைந்தது.
மறைந்து மறைந்து சென்றாலும்
என்னுள் நுழைந்து
என் இதழை மத்தளமாய் மாற்றுகிறது.
அவ்வுறுவம் கண்டிராத படி
துப்பட்டாவை உடல் முழுவதும்
சுற்றிக்கொண்டு வேகமாக நடக்கிறது என் கால்கள்.
என் இல்லத்தின் வாயிலுக்கு
இன்னும் இரண்டு நிமிடம் தான்
ஆனாலும் விடாமல் துரத்துகிறதே இவ்வுறுவம்.
எங்கு சென்றாலும் வருகிறதே , என் உடலை கொஞ்சமல்ல நிறையவே நடுங்கநடுங்க வைக்கிறது.
ஏன் , என்னை இப்படி துரத்துகிறாய் என்று கேட்க துணிந்த என் உதடுகள் , திரும்பி பார்க்கவே அங்கு யாருமில்லை
நிசப்த அமைதியில் நிலைகுழைந்தவளாய் மீண்டும் நடக்க துவங்கினேன்.
அட , ஆண்டவா மீண்டும் அவ்வுறுவம் துரத்துகிறதே.என் உடம்பில் நடுக்கத்தை வரவைக்கவே இப்படி துரத்திதொலைகிறது.
நடுநடுங்கிய என் உடல் நடுசாமத்தில் என் வீட்டுகதவை தட்டியது.
உள்ளிருந்து கலக்கத்துடன் வந்த என்னவனை கட்டியணைத்து , முத்தத்தால் முகம் முழுதும் நனைத்து , அவன் ஸ்பரிசத்தில் முற்றும் துறந்தவளாய் அயர்ந்து கொண்டிருக்கிறேன்.
எங்களின் இரு உடல் சூடு தாங்காமல்
பனியெனும் அவ்வுறுவம் வெட்கத்தில் ஓடி ஒளிந்து , எங்கோ மறைந்து கொண்டது.
நான் என்னவனோடு சாய்ந்து கொண்டே என் இரவை கடத்தி கொண்டிருக்கிறேன்.
அதை கண்ட அவ்வுருவம் கண்ணீர் துளிகளை தான் கண்ட இடமெல்லாம் காணிக்கையாய் உதிர்த்து அதிகாலை சூரியனிடம் அடிபணிந்து மறைந்தது.

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0

விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது. ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன். என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது. இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன். அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி. மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர். பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது. இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன். முன்னால் என் எதிரி முருங்கை...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...