என் மனதை களவாடிய கள்வன் எனக்கு எதிரே , நான் சொன்ன அதே வெள்ளை நிற சட்டையில் அவனின் கூரிய விழிகளால் என்னை கூச்சப்பட வைக்கிறான். எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் , அருகில் செல்லும் வாகன சத்தம் கூட வயலின் வாசிக்கிறது. எண்ணெயில்லா தலையிலும் என் தலைவன் எடுப்பாக தான் இருக்கிறான். அதீத கருப்புக்குள் ஆவியை முக்கி எடுத்த நிறம். எனக்கு தெரிகிறது இன்னும் சிவக்காத அவன் இதழ்கள் , சிவந்த என் இதழ்களை தேடிக்கொண்டிருக்கிறது. ஆன்மீகமே அறியா நாத்திகன் கையில் சிவப்பு கையிறு , அவன் அம்மாவின் ஆசைக்காக அதுகூட அழகுதான். எவ்வளவு நாள் காத்துக்கிடந்தேன் உன்னைக்கான , என்னை கண்டதும் இப்படி பம்புகிறாயே கயவா ? நெற்றியின் ஒரம் வியர்வை துளிகள் உன்னை தடவிக்கொண்டே செல்கிறதே ? நான் கண்ட நொடி அவை அனைத்தும் மண்ணிற்குள் மடிகிறதே கிராதகா , எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக்கொண்டிருப்பாய். என் இதழ்கள் துடிக்குதடா உன்னுடன் பேச , என் உள்ளங்கை மருதானியும் கொஞ்சம் , ஏங்குதடா உன்னை தொட்டு பார்க்க ... ஆத்திகியாய் இருக்கும் என்னை , நாத்திகியாய் மாற்றிவிடு , உன் இதழ் கொண்டு என் திருநீரை அழித்துவிடு. "ஏன் சிர...
Comments
Post a Comment