அவன் வித்திட்ட விந்தில்
விதையாய் முளைத்தேன்!
முதல் முத்த சத்தம் அவன்
இதழ் வழி அறிந்தேன்!
குருதி உடலுடன்
என்னை தொட்டு பார்த்த
முதல் விரல்!
என்னை கரங்களால் கவர்ந்த
முதல் அரண்!
பிறண்டு கண்டதும்
அவன் முகம் தான்
தவழ்ந்து உருண்டதும்
அவன் மடி தான்
எட்டிட்டு கால் புரள
தடமாக அவன் குனிந்தான்
முதல் மொழி நான் பேச
விழிவியப்பில் மனம்
நனைந்தே போனான்
காலங்கள் கரைந்தோட
பள்ளியில்லா புத்தகத்துள்
துலைந்தோட சொன்னான்
திமிரெனும் தன்மானத்தை
திளைக்காமல் காட்ட சொன்னான்
நண்பனை நம்ப சொன்னான்
துரோகியை விலக்க சொன்னான்!
பிடித்தது அனைத்தையும்
கண் இமைக்காமல் முடிக்க சொன்னான்!
சாதிகள் இல்லையென்றான்!
காதலும் வேண்டுமென்றான்!
முடிந்த வரை உழைக்க சொன்னான்
பிறர் பேச வாழச் சொன்னான்!
உதவியில் புரள சொன்னான்
விதி முடியும் வரை வாழச் சொன்னான்!
தகப்பனாய் அவன் அளித்தான்
என் உயிரில் அதை செலுத்த சொல்லி!
Comments
Post a Comment