Skip to main content

Posts

பனியோடு ஓர் நாள்

பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது. பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை புகைக்குள் என் உதடுகள்,
முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு. நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து. காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம். நேரம் ஆக ஆக வெள்ளை புகையின் ஆக்ரோஷம் க…
Recent posts

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண்ணை போல ஆசையில் அ…

இரவல் வரிகள் - 01 (கார்க்கியின் ஒரு நாள் ரசிகன்)

காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே
நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே 
கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே 
இருள் உலகினில் இருக்கைகள் அமைத்து  ஒளிர் நிலவினில் இசையையும் சமைத்து மழையாய் நனைத்திடும் என் ஈரமாய் நீயே உறைந்தாயே  உன் இதழ் மொழி அசைவினை கண்டேன்  என் முதல் மொழி இருளினில் கொண்டேன் நான் கண் முழிக்கும் நேரம் அதை ரசித்தாயே இரவல் கேட்கிறேன் ஏன் ஒதுங்கி நீ சென்றாய் பெண்ணே  விழியில் ரசித்த நீ ஏன் நிழலினில் நகர்ந்தாய் முன்னே ஆராரோ பாட நீயும் இங்கே  உன் மேல்  சாயும் நேரம் எங்கே
காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய் என் கனவிரவே என் நிழற்பகலே
நிழலாய் அன்று நிஜமாய் நின்று  கொன்றாய் வென்றாய் பெண்ணே 
கனவாய் அன்று துணையாய் இன்று வென்றாய் கொன்றாய் கண்ணே
காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய்  என் கனவிரவே என் நிழற்பகலே!!!

பயணக் காதல் - 03

பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வுகளை முடித்த நாளிலிருந்து, வீட்டிற்குள்ளும் சரி வெளியிலும் சரி அடுத்த என்ன படிக்கலாம் என்ற பேச்சை மீறி அடுத்து எந்த கல்லூரியில் படிக்க வைக்கலாம் என்ற பேச்சே ஆஸ்தானமாக விவாத பொருளாக மாறிக் கொண்டிருந்தது. எனக்கோ எந்த கல்லூரி என்பதை தாண்டி எந்த ஊரில் படிக்கலாம் என்ற சிந்தனை வெறித்தனமாக ஆழ் மனது வரை சென்று குடைந்து கொண்டிருந்தது. எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களின் Bio-Data - வை முழுதும் எடுத்து கொண்டு, வீட்டில் உள்ளவர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தேன். தெரியாத ஒரு விஷயத்தையும் தெரிந்தது போல் காட்டி பெற்றோர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் நாம். அதில் ஒரு அலாதி சுகம். நான் தேர்ந்தெடுத்த அந்த இரண்டு ஊர்கள் சென்னையும் கோயம்புத்தூரும் , அதில் என்னை அறியாமலையே நடந்த ஒரு சுவாரசியம், பாண்டிச்சேரியை நான் அதுவரை அறிந்திறாத என் சொந்தக்காரர் Refer செய்தது தான். சொந்தங்களிலும் சில நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். பிறகு , சென்னை மோசன ஊர் என்று என் மீது அக்கறை கொண்ட ,உறவினர் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் விஷப்பூச்சிகள் கொளுத்தி போட , சென்னையும் …

பயணக் காதல் - 02

நேரம் சரியாக ஏழு மணி, இருள் சூழா பெளர்ணமி அது , சரி "வா போகலாம்" என்ற தொனியில், என் இருசக்கர வாகனத்திடம் தனியே பேசியபடி என்‌ வீட்டை நோக்கி கிளம்பினேன். வாகனங்கள் எல்லாம் வரிசைக்கட்டிய படி நெரிசலில் தவழ்ந்து கொண்டிருந்தது. "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற நம் அரசின் கோட்பாடு காலாவதியாகி கால் நூற்றாண்டு ஆன உணர்வு. வடித்தெடுத்த முட்டாள்கள் ஆங்காங்கே ஹாரன் அடிக்க, பிச்சைக்காரர்கள் "சார்" என்று ஆங்கிலத்தில் பிச்சை கேட்க, தூரத்தில் கரைவேட்டி, கட்சி கூட்டம் நடத்த, நம் நாடு வல்லரசு ஆனது போல் ஓர் நிழல் தோற்றம் என் கண் முன்னே. நேரம் ஆக ஆக நெரிசல் நீண்டு கொண்டே போனது. என் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்த படி , அவளின் முகம் பார்த்த நொடி இமைக்காமல் நின்றது. மஞ்சள் நிற ஸ்கூட்டி அவளை ஆரத்தழுவி அணைத்து கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவில் நான் கண்ட அவளின் முகம், தேடினாலும் கிடைக்காத வரம். ஐபோனை கையில் எடுத்து எதையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் நெற்றிக்கு நடுவே, அவளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு. கிறுக்காத ஓவியம், கிறங்கடிக்கும் சிற்பமாய் என் அருகே , ஓர் நாள் மு…

பயணக் காதல் - 01

பள்ளியின் முதல் நாள் தொடங்கி கல்லூரி இறுதி நாள் வரை தென்மாவட்டங்களின் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து சுவாசித்தவன் நான். சொந்த ஊரில் பகட்டாக வாழ்வதும் ஒரு வித போதை தான். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே பயணங்கள் பக்கத்து ஊர் செல்வதோடு முடிந்துவிடும். மிஞ்சிப்போனால் கல்யாணம், கருமாதி என்று அடுத்த மாவட்டம் வரை தொடரும். கல்லூரி நாட்களிலும் அதே நிலைமை தான் , அளவிற்கு அதிகமான பயணங்கள் , ஆனால் அளவான தூரத்தில் ஆர்ப்பரிக்க மட்டுமே. புத்தக வாசிப்பு நிச்சயம் ஒருவனை தேடலின் பயணத்தை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதை ஆணித்தனமாக நம்பும் திராவிடன் நான். கல்லூரிக்குள் கனவுகளை தொலைத்து அதை தேடி சென்னைக்கு இரயில் ஏறிய கோமாளி பொறியாளர்கள் வரிசையில் கடைசிக்கு முந்தைய ஆளாய் நின்ற கடைநிலை பொறியாளன். முதல் முறை சென்னையில் என் சுவாசம், திருவிழா கூட்டத்தில் மாட்டிய திருடன் போல சென்ட்ரல் இரயில் நிலையத்தை வெறிக்க வெறிக்க அதிகாலை 3 மணிக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றும் தென்மாவட்டங்களில் அனேக ஊர்களில் இரவு 9 மணிக்கே விளக்கை அணைத்து, மின்சாரத்தை மிச்சம் செய்யும் பழக்கம் உண்டு. அதை பார்த்து வளர்ந்த எனக்கு ஏதோ பல …

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!
இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.
பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.
தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.
உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.
எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!
காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.
திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!
ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?
இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.
எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.
உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?
தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் …