Skip to main content

இரவல் வரிகள் - 01 (கார்க்கியின் ஒரு நாள் ரசிகன்)



காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய் 
என் கனவிரவே என் நிழற்பகலே
காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய்
என் கனவிரவே என் நிழற்பகலே

நிழலாய் அன்று நிஜமாய் நின்று 
கொன்றாய் வென்றாய் பெண்ணே 

கனவாய் அன்று துணையாய் இன்று
வென்றாய் கொன்றாய் கண்ணே 

இருள் உலகினில் இருக்கைகள் அமைத்து 
ஒளிர் நிலவினில் இசையையும் சமைத்து
மழையாய் நனைத்திடும் என் ஈரமாய் நீயே உறைந்தாயே 
உன் இதழ் மொழி அசைவினை கண்டேன் 
என் முதல் மொழி இருளினில் கொண்டேன்
நான் கண் முழிக்கும் நேரம் அதை ரசித்தாயே
இரவல் கேட்கிறேன் ஏன் ஒதுங்கி நீ சென்றாய் பெண்ணே 
விழியில் ரசித்த நீ ஏன் நிழலினில் நகர்ந்தாய் முன்னே
ஆராரோ பாட நீயும் இங்கே 
உன் மேல்  சாயும் நேரம் எங்கே

காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய் 
என் கனவிரவே என் நிழற்பகலே
காமம் தாண்டி காதல் செய்ய கற்று தந்தாய்
என் கனவிரவே என் நிழற்பகலே

நிழலாய் அன்று நிஜமாய் நின்று 
கொன்றாய் வென்றாய் பெண்ணே 

கனவாய் அன்று துணையாய் இன்று
வென்றாய் கொன்றாய் கண்ணே

காதல் பேச்சில் காலம் தாழ்த்தி எங்கோ போனாய் 
என் கனவிரவே என் நிழற்பகலே!!!

Comments

Popular posts from this blog

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...