பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது.
பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது.
வெள்ளை புகைக்குள் என் உதடுகள்,
முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது.
முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது.
போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு.
நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து.
காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம்.
நேரம் ஆக ஆக வெள்ளை புகையின் ஆக்ரோஷம் குறைந்து எரிக்கும் சூரியனும் மெதுவாய் ஒளியில் படர்ந்து கொண்டிருந்து. தூரத்தில் பனி நனைத்த செய்தி தாள்களின் , முகப்பின் ஓரத்தில் தலைப்பு செய்தியாய் பேருந்து கட்டண உயர்வு. அருகே, அந்த அதிகாலையிலும் பேருந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் படிப்பறிவில்லா பாமரனின் அமர்வும் , சிரித்த படி மேல் நகர்ந்தேன்!!!
Comments
Post a Comment