நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது. ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது. கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம். ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும். அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள். யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான். மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்? காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள். நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது. அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ? ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப...