கனவுகளை தேடி தேடி
கரை படிந்த படிகமானேன்
கனவிற்கு ஓர் உயிர் இருந்திருந்தால்
கதறி துடித்திருக்கும்
கருணையும் அழுதிருக்கும்
உயிரில்லா ஜடத்திற்க்கு
உயிரூட்ட ஓர் உணர்வு
உணர்வில்லா உடம்பிற்கு
உயிரென்று ஓர் கனவு
தேடி தேடி துவண்ட மனம்
தேம்பி தேம்பி அழுகிறது
அரவணைக்க ஏங்கவில்லை
ஆறுதல் சொல்ல ஏங்குகிறது
கனவுகளை முந்திகொண்டு
காலங்கள் கரைகிறது
நினைவுகளை அழித்த படி
நேரங்கள் நகர்கிறது
கண்மூடும் வாழ்கையில் தான்
கனவுகளை புதைத்த படி
கண்ணயர்ந்து புலம்புகிறேன்
கல்லரை பெட்டிக்குள்ளே
Comments
Post a Comment