நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது.
ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது.
கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம்.
ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும்.
அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள்.
யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான்.
மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்?
காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள்.
நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது.
அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ?
ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப்போமே!
எங்கள் வியர்வையின் வரிப்பணம் தான்
உங்கள் உணவின் முதல்பிடி..
என்பதை அறியமறந்தீறோ?
உங்கள் உணவின் முதல்பிடி..
என்பதை அறியமறந்தீறோ?
இன்று , நேற்று அல்ல என் மூளைக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இது போன்ற பல நிகழ்வுகளை , பன்முக செய்தியோடு பார்த்து பழக்கப்பட்டவன் நான். நான் மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்கும் அதே மனநிலைதான்.
இருந்தும் எதுவும் மாறவில்லை இதுவரை , உங்கள் அடக்குமுறைக்கு உட்பட்டவர்கள் தவறே செய்திருக்கலாம் , ஏன் தொழிலதிபரின் மகள் கார் ஏற்றி கொன்றது போல் கொலை கூட செய்திருக்கலாம்.
ஆனால் நடுநிலை என்பது ஒன்று தானே , உயர்நிலை வர்க்கங்களுக்கு ஓர் நியாயம் , கடைநிலை வர்க்கங்களுக்கு ஓர் நியாயம் என்று தரம் பார்த்து பிரிப்பது எவ்விதத்தில் பொருந்தும்.
இரவு பகல் பாராது இமை மூட நேரமின்றி மக்களுக்காக உழைக்கும் உங்களின் வியர்வை , இது போன்ற விஷயங்களில் தான் விஷமாய் மாறுகிறது.
இது போன்ற அடக்குமுறை இனியேனும் நடக்காமல் , நடுநிலையாய் இருப்பது தான் மக்கள் அனைவரின் விருப்பமும்.
அது போன்று இருப்பது தான் "காவல்துறை உங்கள் நண்பன்" என்ற வாசகத்திற்க்கும் பொருத்தமாய் இருக்கும்.
மாறிடும் என்ற நம்பிக்கையில்?
Comments
Post a Comment