நீலமேக வானமெங்கும்
நெருப்பாய் ஓர் வெளிச்சம்
நெருப்பாய் ஓர் வெளிச்சம்
நித்திரை நிலவொளியும்
நிழல் மூடி மறைந்தது
நிழல் மூடி மறைந்தது
உப்பு காற்று
முகம் தடவ
மணல் துகள்கள்
கட்டி அணைக்க
முகம் தடவ
மணல் துகள்கள்
கட்டி அணைக்க
அலைகளுக்குள்ளே
ஓர் அழுத்தம்
அவள் கால்களை
அழுத்தி பிடிக்க
ஓர் அழுத்தம்
அவள் கால்களை
அழுத்தி பிடிக்க
ஆதவனும் எட்டிப்பார்த்தது
அக்கன்னியின்
அழகிய முகத்தை
அக்கன்னியின்
அழகிய முகத்தை
அலைகளின் முத்த சிதறல்கள்
அவளின் முகத்தை
நனைத்தபடி வழிந்தது
அவளின் முகத்தை
நனைத்தபடி வழிந்தது
தூரத்தில் தெரிந்த
பாய்மர படகும்
அவளை நோக்கியே நகர்ந்தது
பாய்மர படகும்
அவளை நோக்கியே நகர்ந்தது
ஏதும் அறியாதவளாய்
அவள் கண்களுக்குள்
ஓர் கடல்நீர்..
அவள் கண்களுக்குள்
ஓர் கடல்நீர்..
எதையோ துலைத்தவள் தான்
பாவம்
விழிநீரில்
விம்மியபடி தேடுகிறாள்...
பாவம்
விழிநீரில்
விம்மியபடி தேடுகிறாள்...
அவளிடம் ஆறுதல் சொல்ல
வாய்பேசா அவ்வலைகளும்
ஆர்வத்தில் ஆர்ப்பரித்தது
வாய்பேசா அவ்வலைகளும்
ஆர்வத்தில் ஆர்ப்பரித்தது
நிமிடங்கள் நகர
கட்டி அணைத்த மணல் துகள்களை உதறியபடி
கட்டி அணைத்த மணல் துகள்களை உதறியபடி
கடலுக்குள் காதல் செய்ய
கன்னியவள் மூழ்கிவிட்டாள்
கன்னியவள் மூழ்கிவிட்டாள்
அவளை உடல்கோர்த்து
உருட்டி சென்று
உணர்விற்க்கு உயிரளித்து
உருட்டி சென்று
உணர்விற்க்கு உயிரளித்து
உடலைமட்டும் கக்கியபடி
உள்ளுக்குள்ளே மறைந்தது
முகமில்லா அவ்வலைகளும்..
உள்ளுக்குள்ளே மறைந்தது
முகமில்லா அவ்வலைகளும்..
Comments
Post a Comment