மனிதம்
மறைந்ததா ?
இல்லை மடிந்ததா ?
மறைந்ததா ?
இல்லை மடிந்ததா ?
மறைந்தது என்றால்
மறைத்தது யார்?
மறைத்தது யார்?
மடிந்தது என்றால்
அழித்தது யார்?
அழித்தது யார்?
தன் நலத்தை
தேடும் அவனின்
ஆறறிவு அழித்ததோ ?
தேடும் அவனின்
ஆறறிவு அழித்ததோ ?
இல்லை , தற்பெருமை
பேசும் அவனின் நாவறிவு
மறைத்ததோ ?
பேசும் அவனின் நாவறிவு
மறைத்ததோ ?
உடலில்லா மனதிற்க்கு
வஞ்சபுகழ்ச்சி ஏராளம்
அறுபட்ட உடலிற்க்கு
வஞ்சக இகழ்ச்சி தாராளம்
வஞ்சபுகழ்ச்சி ஏராளம்
அறுபட்ட உடலிற்க்கு
வஞ்சக இகழ்ச்சி தாராளம்
பிஞ்சென்று பாராமல்
பிஞ்சிலே தோலுரிப்பான்
பின்னூட்ட நிகழ்வையெல்லாம்
ஒளித்திரையில் ஏற்றி வைப்பான்
பிஞ்சிலே தோலுரிப்பான்
பின்னூட்ட நிகழ்வையெல்லாம்
ஒளித்திரையில் ஏற்றி வைப்பான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
அடிப்பட்டு கிடந்தாலோ
அமைதியாய் நகர்ந்திடுவான்
அதைவைத்து கதைபேசி
ஒரு வாரம் கடந்திடுவான்
அமைதியாய் நகர்ந்திடுவான்
அதைவைத்து கதைபேசி
ஒரு வாரம் கடந்திடுவான்
பணமான கல்விக்குள்
மனிதத்தை மறைத்திடுவான்
கல்வியின் பணத்திற்க்கு
மனிதத்தை அழித்திடுவான்
மனிதத்தை மறைத்திடுவான்
கல்வியின் பணத்திற்க்கு
மனிதத்தை அழித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
அடுப்பூதும் பெண்களையும்
அரியணையில் ஏற வைப்பான்
அதில் உள்ள சூழ்ச்சிகளை
அவன் மட்டும் அறிந்திருப்பான்
அரியணையில் ஏற வைப்பான்
அதில் உள்ள சூழ்ச்சிகளை
அவன் மட்டும் அறிந்திருப்பான்
உதவியென்று கேட்டாலோ
உமிழ்ந்தபடி சிரித்திடுவான்
ஊர்உலகம் எல்லாவும் அவன்
செய்ததாய் பறை அடித்திடுவான்
உமிழ்ந்தபடி சிரித்திடுவான்
ஊர்உலகம் எல்லாவும் அவன்
செய்ததாய் பறை அடித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
சாதியென்று சாமியென்று
சங்கத்தை பிரித்திடுவான்
காதலிக்கும் ஜோடிகளை
கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான்
சங்கத்தை பிரித்திடுவான்
காதலிக்கும் ஜோடிகளை
கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான்
ஏழையென்று அறிந்தாலோ
ஏளனமாய் சிரித்திடுவான்
நேர்கொண்டு பார்த்தாலோ
மகிழ்ச்சியாய் நடித்திடுவான்
ஏளனமாய் சிரித்திடுவான்
நேர்கொண்டு பார்த்தாலோ
மகிழ்ச்சியாய் நடித்திடுவான்
மனிதம்
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்ததா?
இல்லை மடிந்ததா?
மறைந்து போன மனிதம்
அழுக்கான சில உயிருக்குள்
எங்கோ இருக்கலாம்
அழுக்கான சில உயிருக்குள்
எங்கோ இருக்கலாம்
இருந்தால் அழித்திடுங்கள்
அது அழிந்து ஆயுள்கள் பல ஆயிற்று..
அது அழிந்து ஆயுள்கள் பல ஆயிற்று..
Comments
Post a Comment