Skip to main content

‪மதிப்பெண்‬ ‪‎வாழ்க்கை‬

அவனுக்கு நன்றாக நினைவிருக்கும் ..ஆம் அன்று தான் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு ..ஊரெங்கும் பரப்பரப்பிற்கு பஞ்சமின்றி அதைதான் எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தது.
அவனும் அதை நினைத்து கொண்டே தான் இரவு முழுதும் உறக்கமின்றி அதிகாலையில் பயத்துடன் படுந்திருந்தான் . பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பு தான் வாழ்வின் முதல் படி என்று எண்ணும் சராசரி தகப்பனின் மனநிலை தான் அவனின் தந்தைக்கும்.
அவன் கண்களுக்கு அன்று மட்டும் தான் கடிகார முட்கள் வேகமாக சுழன்றது ... பத்து மணியை நெருங்க இன்னும் இருபது நிமிடம் உள்ளது . இருந்தும் தந்தையும் மகனும் தயாராகிவிட்டனர் .. இன்டெர்னெட் சென்டருக்கு செல்ல ..
போகும் வழியெங்கும் வழிப்பறி திருடனை போல் ஆங்காங்கே நின்ற சொந்தங்கள் இவன் வாயை கிழறி கொண்டிருந்தனர் . அதையெல்லாம் ஒரு வழியாக கடந்து இன்டெர்நெட் சென்டரின் முன் தந்தையும் மகனும் சென்றாகிவிட்டது.
இன்னும் பத்து நிமிடங்களில் அவன் வாழ்வின் முதற்படியை நிர்னயிக்கும் மதிப்பெண் வெளியாக போகிறது.
அந்த பத்து நிமிட இடைவெளிக்குள் பலவாரான பேச்சுக்கள் அந்த இடத்தையே அலைவரிசை போல் ஆக்கியது.
நேரமும் பத்தாகிவிட இவன் கைவிரல்கள் அவனின் ரெஜிஸ்டர் நம்பரை டைப் செய்தது .
என்ன ஒரு ஆச்சரியம் அவன் சற்றும் எதிர்பார்க்காத மதிப்பெண் 461 என்று காட்டியதும் , தந்தையை கட்டி அணைத்தவாரு பிரிண்ட் எடுத்து கொண்டு வெளியே வந்தான் .
யாரென்றே தெரியாத நபரும் கூட தம்பி எத்துனை மார்க்ங்க என்று நலம் விசாரித்த படி சென்றார் .
அந்த இன்டெர்நெட் சென்டரின் வாயிலில் பல முகங்கள் வெவ்வேறு முகபாவனையை வெளிபடுத்தியவாரு நகர்ந்து சென்றனர்.
அதே இடத்தில் சிலரது கைகள் தங்கள் பிள்ளைகளை தட்டி கொடுத்து கன்னத்தை சிவக்க வைத்தன .
மாநில அளவில் முதல் மார்க் எடுத்த மாணவனை டி.வி யில் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் , தூக்கு கயிற்றை தன் கழுத்திற்கு ஆபரணமாக்கும் துர்பாக்கியசாலிகளை பற்றி துளியேனும் எவரும் நினைக்காமல் அடுத்த நாள் வரும் செய்திதாளை பார்த்து பாவப்படுவார்கள்.
அது ஒருபுறம் இருக்க அவனின் தந்தையும் அவனும் அடுத்த படியை தேர்வு செய்யும் சிறைசாலையை நோக்கி பயணம் செய்ய ஆயுத்தமாகினர்.
பாவம் அந்த வயதில் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஹாஸ்டல் என்னும் சிறைசாலையை பற்றி ...
தன்னுடனே வைத்து அழகு பார்க்க வேண்டிய தன் மகனையும் / மகளையும் படிப்பு என்ற பெயரில் விடுதிக்கு தத்து கொடுக்கும் தத்துவ வாழ்வியல் பெற்றவர்களுக்கு சரி எனில் , தலைக்கன படிப்பை படித்து முடித்து நல்ல வேலையில் உள்ள போது முதியோர் இல்லம் தான் உங்களுக்கு சரி என்று பெற்றோர்களை பிள்ளைகள் அனுப்பி வைப்பதும் சரியே என்று தான் தோன்றுகிறது.
‪#‎தொடரும்‬
‪#‎மதிப்பெண்‬ ‪#‎வாழ்க்கை‬

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...