தனக்கான தேடலை தான்தோன்றியாய் துறந்துவிட்டு காலமாற்றத்தால்
இருக்கின்ற துறையை
இன்முகமாய் ஏற்கின்றனர் இக்கால இளைஞர்கள் .
இருக்கின்ற துறையை
இன்முகமாய் ஏற்கின்றனர் இக்கால இளைஞர்கள் .
இது ஏதோ இன்று மட்டும் நடப்பதல்ல , நமது தந்தையின் இளமையிலும் நடந்திருக்ககூடும் . அவர்களும் அப்போது இப்படிதான் மனம் நொந்திருப்பார்கள் .
இன்று ஏதோ ஏதோ துறைகளில் பிரபலமாகிருக்கும் ஆத்மாக்களை நேர்காணல் எடுத்தால் தெரிந்துவிடும் அவர்களின் உண்மையான ஆசையை பற்றி .
இருந்தும் தனக்கான தேடலை தாரக மந்திரமாக உச்சரித்த உன்னதங்களும் இங்கு சாதிக்காமல் இல்லை .
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்கால இளைஞர்களுக்கு இதுதான் நமக்கான தேடல் என்று தடம் காண்பதற்கே கல்லூரியை கடக்க வேண்டியுள்ளது.
நான்கு வருட உழைப்பை பொறியியலில் காட்டிவிட்டு , பிறகு தான் விழிப்பார்கள் . தனக்கு இது சரிவராது என்று ..
இது பொறியியலுக்கு மட்டுமல்ல கலை &அறிவியலுக்கும் ஏற்புடையது தான் ...
அப்படி விழித்தவர்கள் ஒன்று அதே துறையில் அரை மனதாக பயனிப்பார்கள் இல்லை தனக்கான துறையில் முழுமனதோடு உழைப்பார்கள் .
இதில் அந்த அரை மனது காரர்களை பற்றி பேசி எந்த பயனும் இல்லை . ஏனெனில் அவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள் .
ஆனால் இந்த முழுமனது காரர்கள் தோல்வியை ரசிப்பவர்கள் . முயற்சியை முடிவிலியாய் தொடர்பவர்கள் .
அவர்கள் ஒன்று சாதிக்கலாம், இல்லை சறுக்கலிலே சவாரி செய்யலாம் .. அது முக்கியமல்ல ... அவர்களின் முயற்சி.. விடாமுயற்சி .. நிச்சயம் சாதிக்க வைக்கும் ... சாதனையாளனாக்கும்.
இன்றும் கூட கோடம்பாக்கத்தை ஒருமுறை வலம் வந்தால் தெரிந்துவிடும். இந்த முழுமனதுகாரர்களை பற்றி ..
இந்த அரைமனதுகாரர்களை
நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
ஒன்று முழுமனதாக தனக்கான அடையாளத்தை தெரிவு செய்யும் அளவிற்கு தைரியம் வேண்டும் இல்லையென்றால் அரைமனதான அடையாளத்தை முழுமனதாக ஏற்க வேண்டும் .
இது இரண்டிற்கும் நடுவில் நடுநிலையாளனாக வேண்டும் என்று தினம் தினம் மனதை நொந்து கொள்பவர்களை உண்மையில் நினைத்தாலே பாவமாக தான் உள்ளது .
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முழுமனதான அந்த சறுக்கிய வாழ்க்கையே
சாலசிறந்து .
சாலசிறந்து .
Comments
Post a Comment