ஒவ்வொரு நாளும் புதிதான பயணத்தோடு விடைதெரியா வினாவை விறுவிறுப்பாய் தொடுத்து பதிலை மட்டும் தேடிக்கொண்டே நீள்கிறது இந்த கலிகால வாழ்க்கை . தேடுபவன் சற்றுநேரம் நின்றாலே பிணம் என்று சொல்லி மிதித்தே கொன்றுவிடும்.
கருணைக்கு கணக்கு பார்க்கும் , பெருமைக்கு அள்ளி கொடுக்கும்.
உறவை துச்சமாக என்னும் , நட்பை உச்சமாக காட்டும் ...
உச்சமும் துச்சமாகி போகும் உதவி என்று கேட்டு வந்தால்...
வெற்று காகிதத்தால் காதல் வரும்...அந்த
காகிதமும் கரைந்திடவே வந்த காதலும் கானலாய் மறையும் ..
காகிதமும் கரைந்திடவே வந்த காதலும் கானலாய் மறையும் ..
தந்தையும் அநாதையாவான் ... அன்னையும் அன்பை தேடி அலைவாள்.
பணம் என்னும் அழுத்தத்தில் பாசத்தை துலைத்து ... பதராகி போன இந்த மனதிற்கு மன அழுத்தம் என்பது தேவையான ஒன்று தான்.
தேவைதான் என்றாலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை அறியாத வாழ்க்கைக்கு , இத்துனை அழுத்தங்கள் தேவை தானா ?
இதை சொல்லியும் பயனில்லை என்பதை அறிந்தும் சொல்லிதான் தொலைகிறது இந்த ஆறாம்இலக்க அறிவு.
Real words machi..
ReplyDelete