Skip to main content

இரவல்வாசிகள்‬

மெட்ரோ சிட்டியின் சாலைகளில் ஆங்காங்கே நடைபிணமாய் உயிர்வாழ உணவின்றி உணவிற்கு கையேந்தும் முதியோர்கள் எங்கிருந்து வந்திருப்பார்கள் .
ஒரு வேளை பிறந்தது முதலே கையேந்தி தான் வாழ்ந்திருப்பார்களா ? இல்லை அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளால் அப்படி ஆக்கப்பட்டிருப்பார்களா?
ரயில் நிலையங்களிலும் , சிகப்பு விளக்கு நிறுத்திகளிலும் தங்களின் கை ஒடிந்து , கால் இழந்து வாழும் உத்தமர்களையும்
காரில் செல்பவர்களிடம் கைகூப்பி இரவல் கேட்கும் இல்லாதவர்களையும் நினைத்தாலே விழிகள் நனைகிறது .
அரசு தான் இலவச முதியோர் இல்லங்களை இலவசமாய் கொடுக்கிறதே ? இருந்தும் இவர்கள் ஏன் இருக்க இடமின்றி உண்ண உணவின்றி கையேந்தி நிற்கிறார்கள் .
அரசின் இலவச முதியோர் இல்லத்திற்கு செல்லகூடாத அளவிற்கு இவர்கள் தாழ்த்தபட்டவர்களா ? இல்லை தன்னை தன் மகன் கண்டு கொள்ள வில்லையே என்ற விரக்தியில் கையேந்துபவர்களா ?
புரியாத புதிர் தான் அவர்களின் வாழ்க்கை ..
இது ஒரு புறம் இருக்க கையேந்தி வருபவர்களிடம் கையசைத்து கண்நகைக்கிறது .இந்த கர்வம் பிடித்த கணிணி மூளை .
இத்துனைக்கும் அவர்கள் இரவல் கேட்பது இல்லாதவரிடம் இல்லை , கார்பரேட்டில் வேலை செய்யும் காரியவாதிகளிடம் தான் .
இந்த காரியவாதிகள் தான் இருந்தும் இல்லாதது போல் நடிக்கும் நடிகர் திலகங்கள் .
இதையும் கூட விட்டுதெலைக்கலாம் ஆனால் இந்த இரயில் நிலையங்களில் இதிகாச இலக்கியவாதியை போன்று காதில் ஒன்றும் , தோளில் ஒன்றும் மாற்றிகொண்டு எதையுமே கண்டுகொள்ளாமல் சுற்றும் நல்ல உள்ளங்களை பார்க்கும் போது தான் மீண்டும் ஒருமுறை சுனாமி வராதா என்று கூட தோன்றுகிறது .
சரி அதுவும் ஒரு புறம் இருக்கட்டும் , இவ்வாறு கையேந்தும் முதியோரின்
முடிவு என்னவாக இருக்கும்? இப்படியே இரவல் கேட்டே இடிகுழிக்குள்
தள்ளபடுவார்களா ? இல்லை இரக்கம் காட்டதவரை நினைத்து இடிந்து போய் கல்லரை சேர்வார்களா ?
இது போன்ற விடை தெரியா வினாக்களை விதையாக விதைக்கதான் முடிகிறது . அக்கறையுள்ளோர் அறுவடை செய்யுங்கள் .

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

பனியோடு ஓர் நாள்

பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது. பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை புகைக்குள் என் உ தடுகள், முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு. நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து. காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம். நேரம் ஆக ஆக வெள்ள...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...