ஆனந்தின் கால்கள் அங்கும் இங்கும் ஆடிய வாரே அவன் தந்தையை எதிர் நோக்கி காத்துகொண்டிருந்தன.
அவன் தந்தை தணியாத வெயிலில் தள்ளாடியபடி மிதிவண்டியை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நகர்ந்தார்.
தந்தையை பல நாள் பார்க்காதவன் போல் ஆனந்தின் முகம் முழுக்க பூரிப்பு.
பூரிப்பின் ஊடே ஆனந்தின் மொபைல் ஆங்கிலேய பாடலில் அலறியது.
பச்சைபட்டனை அழுத்தியதும் ஓர் அகோர குரல் "மச்சி எங்கடா இருக்க , எவ்வளவு நேரம் டா உனக்காக வெயிட் பண்றது , பசங்க எல்லாம் உன் மேல செம காண்டல இருக்காங்க .. கிளம்பிட்டையா" என அவன் வினவ
ஆனந்தும் "கிளம்பிட்டேன் மச்சி இப்ப தான் அப்பா வந்தாரு , அவருட்ட காசு வாங்கிட்டு இப்ப வந்திடுவேன் என்றான் ..
சரி சரி லேட்டா வந்தாலும் வர்ரப்ப கையில காசு கொண்டு வந்திரு , இன்னைக்கு பாண்டிசேரி போயே ஆகனும். சரக்கு அடுச்சே ஆகனும் .
கண்டிப்பா மச்சி சரி இரு அப்பாட்ட காசு உஷார் பண்ணிட்டு கூப்புடுரேன் .
சரி டா ..
கைலாசம் அதற்குள் தன் அயர்ந்த தொண்டைக்கு நீர் ஊற்றி அமைதி படுத்திகொண்டிருந்தார் .
ஆனந்தின் குரல் ஒலித்தது "அப்பா பஸ்க்கு டைம் ஆச்சு"
கைலாசம் கணத்த குரலில் "ஏன்பா இன்னைக்கே கண்டிப்பா பீஸ்(fees) கட்டியே ஆகனுமா"
ஆமாப்பா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள கட்டனும் இல்லைன்னா exam எழுத முடியாது பெயில் பண்ணிருவாங்க..
அதுக்கிள்ள ராமகிட்ட கேட்டிருந்தேன் அவன் இன்னைக்கு முடியாதுன்னு சொல்லிட்டான் அது தான் யோசிக்கிறேன் என்றார் தயங்கிய குரலில் .
ஆனந்திற்கு அளவில்லா கோபம் , அவனின் வார்த்தைகள் கைலாசத்தின் நெஞ்சை பதம்பார்த்து கொண்டிருந்தது .
அப்புறம் எதுக்கு என்ன படிக்க வைக்குற , நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு தான் கடைசி நாள்ன்னு , அங்க கணேஷ் வேர எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கான் ...இப்ப நான் என்ன பண்றது .
5000 ரூபா கூட இல்லைன்னு சொன்னா என்ன எல்லாரும் கேவலமா பாப்பாங்க , என்று கண்கள் சிவக்க கரித்துகொண்டிருந்தான்.
கைலாசம் தன் கையாளாகா நிலையை எண்ணி மனதிற்குள் வெம்பி கொண்டிருந்தார்.
சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.
Comments
Post a Comment