வெளியில் நின்றிருந்த ஆனந்தின் அலைபேசி மாறாத ஆங்கிலேய பாடலில் அலறியது.
இம்முறை அகோரியின் குரலுக்கு மாற்றாக அவனுக்கானவளின் குரல்.
" எங்கடா இருக்க , காலைலயிருந்து phone யே பண்ணல "
"அதெல்லாம் ஒன்னும் இல்லடி", அப்பா கூட கொஞ்சம் வெளிய வந்தேன் அதுதான் வேற ஒன்னுமில்ல
ஓ , சரி சரி
சரி , நான் அப்புறம் கூப்புடுறேன் என்ற சொல்லி தொடர்பை துண்டித்தான்.
உள்ளே , செட்டியாரின் குரல் மேலும் வலுத்தது.
கைலாசம் தயங்கி தயங்கி "அது ஒன்னுமில்லைங்க கொஞ்சம் பணம் வேணும் , பையனுக்கு பீஸ் கட்டனும் "
ஏன்டா , இப்ப வரைக்கும் வாங்குன பணத்துக்கே வட்டி கட்ட வக்கில்ல , இதுல இன்னு பணம் வேணும்ன்னு வந்து நிக்கர "
அதற்கு பதில் அளிக்க துடித்த கைலாசத்தின் வாயிற்க்கு செட்டியாரின் துணைவி சற்றே கடிவாளம் போட்டார்.
காலங்காத்தால சாப்புடுற நேரத்துக்கு கரக்டா வந்து உசிர எடுக்குதுக ... எத்தனவாட்டி தான் சொல்ரது ...
செட்டியாரை பார்த்து "ஏங்க , நீங்க வந்து சாப்புடுங்க , என்றாள்.
சரி , இங்கையே இருடா , கொஞ்சம் வயித்துக்கு போட்டுட்டு வந்திருரேன்" என்று சொல்லிவிட்டு செட்டியாரின் கால்கள் நடையை கட்டியது.
கடனுக்கான காத்திருப்பில் அயர்ந்தவனாக , தன்னைதானே தாழ்த்தி கொண்டு கைகட்டி நின்று கொண்டிருந்தான்.
கைலாசத்திற்க்கு இது புதிதல்ல , பலமுறை இதே மாதிரி அவமதிப்பை , அனுபவரீதியாக உணர்ந்துள்ளான்.
ஆனால் , இவை அனைத்தையும்
வெளியிலிருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்திற்கு ....
வெளியிலிருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்திற்கு ....
#சுழலும் #சக்கரம் #பகுதி_4
Comments
Post a Comment