சரி இருப்பா செட்டியார்ட்ட கேட்டு பாக்குரேன் என்று வெளியே வந்தவர் தன் மகனையும் பின்னாள் ஏற்றி கொண்டு மிதிபலகையை அமுக்கினார் சுழன்று கொண்டே நகர்ந்தது சக்கரம்.
மிதிவண்டியின் சக்கரம் சுழல்வதை விட ஆனந்தின் மனம் இன்னும் அதிகமாக பதறி கொண்டிருந்தது.
எங்கே பணம் வராமல் போய்விடுமோ என்று , சிந்தித்தபடியே உர் என்று பின்னாள் அமர்ந்திருந்தான்.
ஆனால் கைலாசமோ மனம் முழுக்க ரனத்துடன் செட்டியார் என்ன சொல்வாரோ என்ற பதற்றத்தில் மிதிவண்டியை அழுத்த முடியாமல் அழுத்தி கொண்டிருந்தார்.
அதற்குள்ளாகவே மீண்டும் அலற துவங்கியது ஆனந்தின் கைபேசி.
மீண்டும் அதே அகோர குரல் ஆனந்தை பேசவிடாமல் ஆவேசமாக அலறியது.
மெளனத்தை பதிலாக அளித்துவிட்டு கைலாசத்திடம் தனது ஆவேசத்தை இன்னும் ஆக்ரோசமாக்கினான்.
பாவம் அரைஆயுளை கடந்த கைலாசம் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு அழுவதுதான் ஒரே வழி ஆனால் அதற்கும் ஆண் குணம் இடம் கொடுக்கவில்லை.
கைலாசம் கடின உழைப்பாளி தான் சலவைதொழில் செய்தே தன் மகனை சங்கடமின்றி வளர்த்தவர்.
தான் பெற்ற துயரத்தை நிச்சயம் தன் பிள்ளை பெறக்கூடாது என்று நினைத்துகொண்டே தன் நாட்களை நகர்த்தியவர்.
விழிகளுக்கு இடையே லேசான ஈரம் எட்டி பார்க்க "ஏன்பா இந்த வருஷம் கண்டிப்பா வேலை கிடச்சுரும்ல என்று ஆனந்தின் செவிகளுக்கு அவரின் தளர்ந்த குரலில் செய்தி அனுப்ப
" எங்க கிடைக்க போகுது இன்னும் exam fees யே கட்டல , அதுவும் இல்லாம extra course படுச்சா தான் இப்பவெல்லாம் வேலை கொடுப்பாங்க , சும்மா பேசாம சைக்கிள்ள ஸ்பீடா ஓட்டு என்று குரைத்தான் .
மேலும் மனம் நொந்தவராக , அந்த extra course க்கெள்ளாம் எவ்வளவுப்பா ஆகும் என்று கேட்க
அதுக்கெள்ளாம் 50000 ஆகும், இங்க 5000 த்துக்கே வக்கிள்ள , சும்மா மனுசன காண்ட் யேத்தாம சைக்கிள ஓட்டு.
வேகமாக ஓடிய சக்கரங்களின் வேகம் செட்டியாரின் வீட்டை நெருங்கியதும் குறைந்தது.ஆனந்த் கீழே இறங்கினான்.
நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் கைலாசம் உள்ளே நகர்ந்தார்.
#சுழலும் #சக்கரம் #பகுதி_2
Comments
Post a Comment