நீ இங்கையே இருப்பா நான் போய் செட்டியார பாத்துட்டு வரேன் என்று தயக்கத்துடன் உள்ளே நகர்ந்தார்.
செட்டியார் பணம் எனும் போதைக்கு தன்னை அடிமை படுத்தி கொண்டவர்.அவ்வூரில் உள்ள அனைத்து ஏழை வர்க்கத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதில் கைதேர்ந்தவர்.
தேக்கு நிலகதவை உரசாமல் நின்று கொண்டிருந்தது கைலாசத்தின் கால்கள் , மெல்ல அவர் குரல் அழைத்தது.
அய்யா , பெரியபையன் வந்திருக்கேன் .
இருடா வரேன்" உள்ளிருந்து எதிர்குரல் ஒலித்தது.
பெரியபையன் என்பது அவ்வூரில் உள்ள ஆதிக்கசாதிகளால் அன்போடு அழைக்கப்படும் அடிமை பெயர்.
செட்டியார் வந்தாகிவிட்டது.
நெற்றியில் விபூதியிட்டு , கதர் ஆடையில் முதலாளித்துவ தோரணையில் மிடுக்காக வெளியே வந்தார்.
அவரை பார்த்ததும் கைலாசத்தின் கைகள் தானாகவே அவரை வணங்கியது .
வெளியில் ஆனந்த் குதூகலத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.
காரணம் தன் தந்தையிடம் அடுத்து ஒரு 50000 த்திற்கு வரும் வழியிலேயே சக்கரத்தை சுழலவிட்டிருக்கிறான் அல்லவா ...
அவன் தந்தையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.
இது இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் எப்படியேனும் கஷ்டப்பட்டு தன்னிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.
இது இருந்தால் தான் வேலை கிடைக்கும் என்றால் எப்படியேனும் கஷ்டப்பட்டு தன்னிடம் கொண்டு சேர்த்துவிடுவார்.
ஆனால் அதற்காக அவன் தந்தை படும் கஷ்டத்தை நினைத்து பார்க்கா நிலையில் தான் அந்த அகோரி நண்பர்கள் அவனை சலவை செய்திருந்தார்கள்.
செட்டியாரின் குரல் மிடுக்காய் ஒலித்தது ,
"என்னடா விஷயம் காலங்காத்தால வந்திருக்க ?
அய்யா அது ஒன்னுமில்லைங்க .........
வட்டி பணம் ஏதாச்சும் கொண்டு வந்திருக்கையா ?
அய்யோ அய்யா அது இல்லைங்க .....
அது தான பாத்தேன் ...
சரி என்ன தான்டா விஷயம் ...
எப்ப வட்டி பணத்த தர போற
சரி என்ன தான்டா விஷயம் ...
எப்ப வட்டி பணத்த தர போற
என்ற செட்டியாரின் கேள்விக்கு
வார்த்தை இல்லாதவனாய் தவித்து கொண்டிருந்தான் கைலாசம்.
வார்த்தை இல்லாதவனாய் தவித்து கொண்டிருந்தான் கைலாசம்.
அதற்குள் வெளியில் நின்றிருந்த ஆனந்தின் அலைபேசி மாறாத ஆங்கிலேய பாடலில் அலறியது.
#சுழலும் #சக்கரம் #பகுதி_3
Comments
Post a Comment