Skip to main content

சுழலும் சக்கரம் பகுதி - 5

ஆனால் , இவை அனைத்தையும்
வெளியிலிருந்து பார்த்து கொண்டிருந்த ஆனந்திற்கு பலவித யோசனை.
கடன் தான கேட்கிறார் , எப்படியும் திரும்ப கட்ட போவது தான , அதுக்கு ஏன் இப்படி அவமானபடுத்துறாங்க , என்று தன் மனதுக்குள் எண்ணி கொண்டான்.
அப்பா கடனெல்லாம் வாங்க வேணாம் , கிளம்புங்க போகலாம் என்று சொல்லதுடித்த மனதிற்க்கு , அவனின் புதிதான குடிகார மூளை இடம் கொடுக்காமல் , கொஞ்சம் விலகி நிற்க செய்தது.
ஆனால் , வீட்டிற்குள் கைகட்டி
நின்றிருந்த கைலாசமோ , இது தான் நான் வாங்கும் கடைசி கடன் , இனி என் பிள்ளை வந்திடுவான் , என் கஷ்டமெல்லா தீந்திடும் , என்று ஆகாய பந்தலில் கோட்டை கட்டி கொண்டிருந்தார்.
செட்டியாரின் கால்கள் உணவுண்ட கையோடு மெதுவாக நகர்ந்தது.
அருகிலிருந்த நீர்குவளையில் கையை நனைத்துவிட்டு , அவருக்கான சிம்மாசனத்தில் கொஞ்சம் அயர்ந்தவராய் தன்னை சாய்த்துகொண்டார்.
"எவ்வளவு டா பணம் கேட்ட ? என்ற செட்டியாரின் வார்த்தை கைலாசத்திற்க்கு கேட்டதோ என்னவோ , அதை ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்த ஆனந்தின் செவிகளுக்கு தேனாக பாய்ந்தது.
அய்யா , "5000 பையனுக்கு பீஸ் கட்ட வேணும்ங்க" கூட 500 சேர்த்து தாங்கய்யா , புள்ள வெளியூர் போறான் , கைசெலவுக்கு குடுக்கனும் என்றார் பணிவான குரலில் ..
ஆஹா , ஜன்னலின் ஓரம் ஒட்டி கொண்டிருந்த ஆனந்திற்க்கு அளவில்லா மகிழ்ச்சி , கூட ஒரு 500 சேர்த்து கிடைக்க போவுது என்று ...
ஏய் , பத்மா அந்த பெட்டியில இருந்து ஒரு 6000 எடுத்துட்டு வா " என்று ஒலித்தது செட்டியாரின் குரல்.
கைகட்டி நின்று கொண்டிருந்த கைலாசத்தின் மனதும் கொஞ்சம் ஆசுவாசமானது.
டேய் , ஏதோ நிலபத்திரத்த அடமானம் வச்சிருக்கையேன்னு சொல்லிதான் , நீ கேக்கரப்பவெல்லாம் கொடுத்திட்டுருக்கேன் " பாத்து நடந்துக்கோ.
"அடுத்த மாசத்திலிருந்து ஒழுங்கா வட்டி கட்டுற வழிய பாரு",
ஆ , "சரிங்கய்யா , கண்டிப்பா கட்டிருறேன் சாமி"
ஏய் பத்மா , இன்னும் அங்க என்ன பண்ணிட்டிருக்கிறவ , என்று கொஞ்சம் கடிந்து கொள்ள ...
அட , "இருங்க வந்திட்டு தான இருக்கேன்"
"இந்தாங்க புடிங்க" , என்று பணத்தை நீட்டினாள்.
"ஊரான் வீட்டு நாயிக்கெல்லாம்
ஓடி ஓடி உதவி செஞ்சு
ஓலை குடிசையில படுத்தானாம் , பணம் கொடுத்த பாரிவள்ளேன்" என்று முனுமுனுத்து கொண்டே உள்ளே நகர்ந்தார் செட்டியாரின் மனைவி.
இவற்றையெல்லாம் வெளி இருந்து கேட்டு கொண்டிருந்த , ஆனந்திற்கு தூக்கி வாரி போட்டது.
"யார கேட்டு இந்த ஆளு இடத்த அடமானம் வச்சாரு", என்று மனதுக்குள் கொதித்து கொண்டிருந்தான்.
"அந்த ஆளு வெளிய வரட்டும் , இன்னைக்கு ரெண்டுல ஒன்னு கேட்டுறேன்" , என்று தனக்குதானே பேசிகொண்டிருந்தான்.
"டேய் , இதுல கைநாட்டு வச்சிட்டு , இந்தா பணத்த வாங்கிட்டு போ" ,
சரிங்க சாமி , வரனுங்க என்றவாரே பணத்தை பெற்றுகொண்டு மெல்ல நகர்ந்தான்.
வெளியே வந்த கைலாசத்தை கண்ட ஆனந்தின் கண்கள் கடும் கோபத்தோடு ....
#சுழலும் #சக்கரம் #பகுதி_5

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...