கார்த்தியின் கண்கள் தனிமையில் கலங்கி கொண்டிருந்தது.
வெளிநாட்டு நிறுவனத்தில் வேர்வையில்லா வேலைதான்.
அழகான துணைவியும் அயல்நாட்டு நிறுவனத்தின் அடிமைதான்.
ஆனாலும் ஏனோ அவன் கண்கள் கலங்கிகொண்டிருந்தது.
மூன்று மாதம் முன்புதான் விவசாய நிலத்தை விலைக்கு வைத்து , வேளச்சேரியில் அழகு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தை தனக்கானதாக இருபது வருட ஒப்பந்தத்தோடு தன்வசப்படுத்தியிருந்தான்.
அவன் தந்தைக்கு துளியும் விருப்பமில்லை தான் , என்ன செய்வது இத்தலைமுறை பெற்றோர் தன் பிள்ளைகளுக்கு தன்னையே அடிமையாக்கிவிடுகின்றனர்.
சுருக்கமாக சொன்னால் இத்தலைமுறை பெற்றோரின் யதார்த்த பிரதிபளிப்பு அவனின் தந்தை.
சுருக்கமாக சொன்னால் இத்தலைமுறை பெற்றோரின் யதார்த்த பிரதிபளிப்பு அவனின் தந்தை.
ஏதேதோ சொல்லி தனிமைதளத்தை வாங்கிவிட்டான் . பிறகு எதற்கு வருந்திகொண்டிருக்கிறான் , அதுவும் தனிமையில் ...
சென்னையின் அடைமழைக்கு அவனின் இருபது வருட சுமையும் சுக்குநூறானது.யோசிக்க கூட நேரம் கொடுக்கவில்லை.
அணிந்திருந்த உடையோடு அருகிலிருந்த அரசுபள்ளியில்
அநாதையாய் ஒரு தஞ்சம்.
அநாதையாய் ஒரு தஞ்சம்.
அப்போதும் அடங்கவில்லை அவன் துணைவியின் ஆசை , இதுக்குதான் திருவான்மியூர்ல வாங்கலாம்ன்னு சொன்னேன் " என்றாள் கடுப்போடு.
நிலைகுலைந்தவனாய் சிரித்தான்.
அடுத்து இங்கு இவனிருக்கும் நிலையறியாத தந்தையின் குரல் அலைபேசி வழியே " அந்த இடத்த விக்காம , இருந்திருந்தா இந்நேரம் முப்போகம் விளஞ்சிருக்கும் தம்பி " என்றார் .
அதற்கும் சிந்தனையில் ஊறியவனாய் சிரித்தான்.
அடுத்து அலுவலகத்தின் அக்கரையான அழைப்பு " மிஸ்டர் கார்த்தி , நாளைக்கு லீவ் போட்ராதிங்க client மீட் இருக்கு" என்று சொன்னதும் தொடர்பு துண்டானது.
அதற்கும் அலுத்து போனவனாய் சிரித்தான்.
விவசாய வர்க்கத்தின் அந்த கடைநிலை சிரிப்பில் தான்
மிளிர்கிறது இக்கால தலைமுறை .
Comments
Post a Comment