Skip to main content

Posts

கற்பனை வாழ்க்கை

எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர். பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான். தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள். விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம். பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும். பிணவறைக்குள் கை கால்...

‪மெளனமான‬ ‪நினைவுகள்‬-1

ஒரு வார விடுமுறைக்கு பின் , முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் அடுத்த செமஸ்ட்டரை எதிர்ப்பார்ப்போடு எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தோம். மீண்டும் அதே சிரிப்புடன் , சின்ன சின்ன சண்டைகளுக்கிடையே நாட்கள் நகர்ந்தது. இரண்டாம் செமஸ்ட்டரில் இருந்து வாரவிடுமுறையில் ஊர் சுற்றலாம் என்பது எங்கள் கல்லூரியின் தளர்த்தப்பட்ட விதி. அவ்விதி அமலுக்கான அடுத்தவாரமே பெரியதாய் சிந்தித்து முடிவில் படத்திற்கு போகலாம் என்பதை ஒருமனதாய் உறுதி செய்தோம். நண்பர்களுடன் முதல் பட அனுபவம் உண்மையில் எவ்வளவு அழகானது. வார்த்தைகளில் வர்ணிக்க முடியா கவிதை அது. ஆனால் அக்கவிதையும் பிழையாகும் என்பதை அந்நாளே அறிந்து கொண்டோம். பெதுவாக பெண் தோழிகளுடன் படத்திற்க்கு சென்றாலே இங்கு உள்ள பல அழுக்கான உள்ளங்கள் தவறாக சிந்திக்கும் அதையும் தத்ரூபமாய் மற்றொருவரிடம் சித்தரிக்கும் என்பதை அதுவரை எங்கள் மனம் அறியவில்லை. கேலிகள் அதிகமாயின , அதையெல்லாம் கேட்டுக்கொண்டு எங்கள் செவிகள் செவிடாய் இருந்ததே தவிர சந்தோஷத்தை இழக்கவில்லை. உண்மையில் நந்தினியும் , ஐஸ்வர்யாவும் அவர்கள் செய்யும் கேலியை ஒரு பெருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. நந்...

‎மெளனமான‬ ‪‎நினைவுகள்‬

நான்கு ஆண்டுகள் , ஆம் எனக்கு நினைவிருக்கிறது. கலைந்தோடும் காலங்களில் எனது நட்பும் சில்லரைக்காசாய் சிதறிப்போனது. நான் ராம்.பள்ளி எனும் இடுகுழியிலிருந்து தப்பித்து பொறியியலில் தலைநுழைத்த முற்போக்காளன். கல்லூரி வாசல் தான் பல புள்ளி கோலமாய் என்னை புதிய கோட்டிற்க்குள் இணைத்தது. கணிணி அறிவியல் என்பதால் பெண்களுக்குள்ளான பாகுபாடை மறந்து சமநிலை உணர்வை முதல்நாளே அவ்வகுப்பறை என் மனதில் பதித்தது. நான் மட்டுமல்ல என்னுடன் முதல் நாள் நட்பான தீலிப்பிற்க்கும் , சலீம்மிற்க்கும் அதே மனநிலை தான். அரட்டைகள் அரங்கேற்றமாகின , சிரிப்பிற்க்கு பஞ்சமில்லா காலமது. வாழ்க்கையின் சுகமான அனுபவங்களை கண்ணெதிரே கண்டு குதூகளித்து கொண்டிருந்தோம். மூவராய் சிரித்த உதடுகள் ஐந்தாகி போனது ஒரே மாதத்தில். நந்தினி என்ற நல்லவளும் , ஐஸ்வர்யா என்ற அடாவடியும் எங்கள் கைகளோடு விரல் கோர்த்த தருணம் அது , உண்மையில் நினைத்தாலே மனமெல்லாம் மழைச்சாரல் தெளிக்கிறது. நான்கு தலைகள் கல்லூரி விடுதிக்குள்ளும் , நந்தினி என்ற நல்லவள் மட்டும் வீட்டிற்க்குள்ளும் அடைக்கலமாய் அடைந்து கிடந்தோம். வகுப்பறை தான் எங்கள் சொர்க்கவாசல் , தி...

‪சாமானியனின்‬ ‪ஆதங்கம்‬

ஒலிம்பிக்கின் கனவுகள் தகர்ந்து கொண்டிருக்கிறது. கருவான நம் சிசுக்கள் தோல்வியில் சிதைந்து கொண்டிருக்கிறது. நாமோ ஏதும் அறியாதது போல் டி.வி சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். உண்மை தான் , இதுவே கிரிக்கெட்டும் ஒலிம்பிக்கில் அங்கம் வகித்திருந்தால் அனைவரின் வீட்டிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஓடிக்கொண்டிருக்கும் , கிரிக்கெட் நடக்கும் அந்நாளில் மட்டும். நானோ , இல்லை மற்ற விளையாட்டுகளை ஆதரிப்பவர்களோ கிரிக்கெட்டுக்கு எதிரிகள் அல்ல. பல ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் நம் நாடு உலக கோப்பையை கைபற்றிய போது பட்டாசை வீதியில் கொளுத்திப்போட்டு குதூகளித்தவன் நான். ஏன் இப்போது ஒலிம்பிக்கை ஆதரிக்கும் அனைவரும் அந்நாளில் அப்படி தான் சந்தோஷத்தில் திளைத்திருப்பர். ஒலிம்பிக்கில் ஏன் என் நாடு பதக்கங்களை பகற்கனவாய் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை இங்குள்ள இளைஞர் மத்தியில் எழுப்பினால் அனைவரின் பதிலும் அரசியல்வாதிகள் என்று ஒரு சேர எதிரொலிக்கும். அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா என்ற கேள்வியை பெற்றோர்கள் மத்தியில் எழுப்பினால் உயர்தர மக்களுக்கு மட்டும்தான் விளையாட்டு உணவளிக்கும் , நடுத்தர மற்றும் கடைநி...

சாமானியனின்‬ ‪‎கேள்விகள்‬

நட்சத்திர காக்கிகளை கண்டாலே இப்பொழுதெல்லாம் கண்கள் தானாக வியர்கிறது. ஏன் என்ற கேள்விக்கு சொல்ல முடிந்த காரணங்கள் ஆயிரங்கள் இருப்பினும் , சொல்லாமல் நகர்வது தான் என் உடம்பிற்க்கு சிறந்தது. கரைவேட்டிகளுக்கு காவல் கொடுக்கும் உங்களை இகழ்ந்தவர்களை விட , அனுதாபத்தில் அயர்ந்தவர்கள் தான் இங்கு அதிகம். ஆனாலும் காரணங்களின்றி உங்கள் கைகள் , கண்டதும் சிலரை அடித்திடும். அதையும் என் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியாய் வேடிக்கை பார்த்திடும். அந்த சிலரும் ஏழ்மையின் பிடியில் வாடித்துடித்திடும் தரைநிலை வர்க்கங்கள். யாரேனும் கேட்டாலோ , அவனுக்கும் அதே நிலைதான். மேல்நிலை வர்க்கத்தை கண்டாலே பம்பி பதுங்கும் உங்கள் விழிகள் , தரைநிலை வர்க்கம் என்றவுடன் தாவிகுதித்து அவர்களை பந்தாடுவது ஏன்? காவல் துறை உங்கள் நண்பன் என்ற உங்கள் வாசகத்தை மறுமுறையேனும் பரிசீலித்து கொள்ளுங்கள். நடப்பவை யாவும் நண்பன் என்ற சொல்லை தகர்த்து சொல்லமுடியா சொற்களை மண்டைக்குள் ஏற்றுகிறது. அடக்குமுறை என்ற பெயரில் பணமில்லா மனிதத்தை அடித்து அடிமை படுத்துவதற்க்கு எதற்கு சுதந்திரம் ? ஆங்கிலேயன் பிடியிலேயே அடிமையாய் இருந்திருப...

‪‎மனிதம்‬

மனிதம் மறைந்ததா ? இல்லை மடிந்ததா ? மறைந்தது என்றால் மறைத்தது யார்? மடிந்தது என்றால் அழித்தது யார்? தன் நலத்தை தேடும் அவனின் ஆறறிவு அழித்ததோ ? இல்லை , தற்பெருமை பேசும் அவனின் நாவறிவு மறைத்ததோ ? உடலில்லா மனதிற்க்கு வஞ்சபுகழ்ச்சி ஏராளம் அறுபட்ட உடலிற்க்கு வஞ்சக இகழ்ச்சி தாராளம் பிஞ்சென்று பாராமல் பிஞ்சிலே தோலுரிப்பான் பின்னூட்ட நிகழ்வையெல்லாம் ஒளித்திரையில் ஏற்றி வைப்பான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடிப்பட்டு கிடந்தாலோ அமைதியாய் நகர்ந்திடுவான் அதைவைத்து கதைபேசி ஒரு வாரம் கடந்திடுவான் பணமான கல்விக்குள் மனிதத்தை மறைத்திடுவான் கல்வியின் பணத்திற்க்கு மனிதத்தை அழித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? அடுப்பூதும் பெண்களையும் அரியணையில் ஏற வைப்பான் அதில் உள்ள சூழ்ச்சிகளை அவன் மட்டும் அறிந்திருப்பான் உதவியென்று கேட்டாலோ உமிழ்ந்தபடி சிரித்திடுவான் ஊர்உலகம் எல்லாவும் அவன் செய்ததாய் பறை அடித்திடுவான் மனிதம் மறைந்ததா? இல்லை மடிந்ததா? சாதியென்று சாமியென்று சங்கத்தை பிரித்திடுவான் காதலிக்கும் ஜோடிகளை கழுத்தறுத்து கண் வியர்த்திடுவான் ஏழையென்று அறிந்தாலோ ...

கல்லரை கனவுகள்

கனவுகளை தேடி தேடி கரை படிந்த படிகமானேன் கனவிற்கு ஓர் உயிர் இருந்திருந்தால் கதறி துடித்திருக்கும் கருணையும் அழுதிருக்கும் உயிரில்லா ஜடத்திற்க்கு உயிரூட்ட ஓர் ...