எட்டு வருடங்கள் ஆகிறது நான் என் ஊரை விட்டு வேற்றூரில் தஞ்சம் புகுந்து.கடந்து போன எட்டு வருடத்தில் சொந்தங்கள் கடந்து நினைவில் வைத்து கொள்ளும்படி நிறைய நண்பர்கள் மட்டுமே சொந்தமாய் உடனிருந்திருக்கின்றனர். பதின் பருவத்தில் பதினொன்றாம் வகுப்பில் தொடங்கிய விடுதி வாழ்க்கை இன்றளவும் என்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பத்தாம் வகுப்பு விடுமுறை முடியும் வரை அம்மாவின் அரவணைப்பில் ராஜாவாய் வலம் வந்த எனக்கு , விடுதி வாழ்க்கை புதிமையான அனுபவம் தான். தினமும் காலையில் "தம்பி , மணி 7 ஆக போகுது சீக்கிறம் எந்திருச்சு கிளம்பு" என்ற வார்த்தையில் தொடங்கி , சூடான இட்லியை ஊட்டிவிட்டு வழி அனுப்பவது வரை அனைத்துமே இன்றும் டைம் மெஷின் இருந்தால் நான் போக துடிக்கும் சுகமான நாட்கள். விடுதி வாழ்க்கை இவ்வன்பிற்க்கு நேர் எதிர். இரண்டடுக்கான இரும்பு கட்டிலில் சுகமின்றி உறங்கும் எங்களை , எழுப்ப தினமும் அதிகாலை 4 மணிக்கே பிரம்புடன் வந்துவிடுவார். எங்களை காக்கும் conjuring தெய்வம். பின் வரிசையில் நின்று அரைகுறையாய் குளித்து சரியாக 5 மணிக்கு படிக்கும் அறைக்குள் ஆஜராக வேண்டும். பிணவறைக்குள் கை கால்...