Skip to main content

Posts

Showing posts from June, 2015

வெட்க பெண்ணே .......

வெட்க பெண்ணே ....... பெண்ணே இது தான் வெட்கமா முதல் முறை உன்னிடம் காண்கிறேன் உன்னிடம் மட்டும் தான் .... கலைந்த கூந்தல் கூட அழகாய் தோன்றுதடி .... காதோர மச்சம் முகத்தழகை கூட்டுதடி .... முழுநிலா முகத்தில் சிறிதொரு கலக்கம் முகப்பருவாய் ஆனாலும் அழகு தான் .... வெட்க பெண்ணே கள்ள பார்வையை காற்றில் வீசி கண் இமைக்கும் நேரத்தில் கானலாய் மறைந்தாயே .... எங்கென்று தேடுவேன் எனக்காக பிறந்தவளை ...... - ம.பிரவீன்

அரசான பேருந்து

சில்லென்ற மழை சாரல் மெல்லமாக மேல் நனைக்க இதமான ஈர காற்று கனிவாக பேசியது குளிரான மொழியில் உதடுகளும் உரையாடியது  குளிருக்கு பதில் அளித்து முகம் கூட வெளிறியது அந்த அழகான மழை தூரலில் நெடுந்தூர பயணத்தில் அரசான பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் விழிகள் தேடியது மங்கையின் கூட்டத்தை .... - ம.பிரவீன்

கல்லறை கனவுகள் ...

கனவான என் கல்லறைக்குள்ளே ... நிஜமான முகத்தவலை நிழலாக கண்டுனர்தேன் பெயரறியா பதுமை அவள் ! வயதரியா மடந்தை அவள் ! விழியோடு விழி பேசி  நிழலான முகத்தவலை நிஜமாக காதலித்தேன் .... அவளின் இரு இதழ் அசைவிற்கு ஈருலகம் வரிசை கட்டும் அவளின் எடுப்பான உடலழகை எட்டுத்திக்கும் பறை சாற்றும் அவள் மேனி நிறத்திற்க்கு ரோஜா பூ ஓதுங்கி போகும் ... நடை பாதையும் அழகானது என்னவளின் பாதம் பட்டு ! மலர் கூட பூப்படைந்தது கன்னியவள் வாடை பட்டு ! கனவான காதலியை கண்ணெதிரே துலைத்தேனே கல்லறைக்குள் புதைந்தேனே ....... ம.பிரவீன்

என் தமிழன்

என் தமிழன் மனம் நிறைய ரணம் ரத்த பந்தம் உயிரறுந்து கிடக்கைலே ..... விழியை சுற்றி ஈரம் நெஞ்சில் இல்லா என் சொந்தங்களை நினைத்து .... பினங்கால் இடறி விழ வீதியெங்கும் பிணம் .... படிக்கச் சென்ற குழந்தை பதுங்கு குழிக்குள்ளே பம்பரமாய் .... பூப்படைந்த பெண்ணவளின் மாராப்பு தலைபாகை ஆனது சிங்களவன் கொழுத்த தலையிலே .... கன்னியவள் பிறப்பு கண்ணிவெடியிலே கலங்கப்பட்டது ... தாகத்தில் தவித்த தமையனுக்கு தண்ணீர் கொடுக்க மனம் இல்லை .... பதுங்கு குழிக்குள் படுத்து தோட்டாக்கள் துளைத்து குண்டுகள் புதைத்து இன்று முள் வேலிக்குள் அகதியாய் முகாம் இட்டு அனாதையை சாகிறான் என் தமிழன் ..... அதை வைத்து ஓட்டெடுத்து அமைச்சரவைல் இடம் பிடித்து ஊர் எங்கும் சொத்து குவித்து ஊர் சுற்றி ஊலா வருகிறான் என் தமிழன் .... ம.பிரவீன்

வாழ்க்கையின் தேடல் ...

வாழ்க்கையின் தேடலில் துவங்கினான் அவன் பயணத்தை ...  பொறியியல் எனும் பொல்லாத படிப்பிற்கு  லட்ச ரூபாய் நோட்டோடு  கட்டுக்கட்டாய் பணம் கொடுத்து  களையாத உடையணிந்து  க ல்லூரி வாசலிலே  ஆபிசர் உடையோடு ....  வீரப்பன் நடையிலே  வீரமாக வீரெழுந்தான் ...  வேரோடு அறுத்துவிட்டான் ...  வேலையில்லை என்று சொல்லி ..  மனஅழுத்தம் என்ற  சொல்லிற்கு  மறுபெயரே நாங்கள் தான் ...  நினைத்த வேலை கிடைக்காமல் ...  கிடைத்த வேலை பிடிக்காமல் ...  தினம் தினம் அழுகிறோம் மனதுக்குள்  பொறியியல ் எனும் பொறி வைக்கும் படிப்பிற்கு  பலியாவது நாங்கள் தானா ...  இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் சான்றோனே ...  பட்டதாரி நிலை மாறட்டும் என் நாட்டில்  வேலையில்லா திண்டாட்டம் ஓழியட்டும் என் மண்ணில் ..  பின் நிலை உயரும் ...  என் நாட்டின் நிலை உயிரும் ...  வருங்காலம் பெயர் சொல்லும்  இந்த பாவப்பட்ட பட்டதாரியின் வாழ்க்கையை பற்றி ...  அது வரை கை ஏந்துவோம் அந்நியவன் முகம் ...

ஒரு வரி ...

1) மன அழுத்தம் நிறைந்த உலகில்  மனம் இல்லாஅழுத்தத்தில் என்னவளை நினைத்து .... ம.பிரவீன் 2) மழையும் குளிரும் ..... ஆகாய சல்லடையில் ஒரு கடல் நீர் நிரப்பி ... மேனியை குளிர வைத்தான் ... அன்பான மழையானவன் ... மழையாலே மேல் நனய இதமான ஈரக்காற்றை உரையாட அனுப்பி வைத்தான் ... குளிருக்கு துணையானவன் ... ம.பிரவீன் 3) அன்று பார் போற்றிய என் தேசம் இன்று அந்நியன் கையில் வியாபாரமாய் ..... பரட்டை தலை தொடங்கி கிழிந்த ஆடையுடன் உருக்குலைந்த மேனியுடன்  உன்ன உணவின்றி உடுக்க உடை இன்றி பாவம் என் மக்கள் பரிதாபமாய் இன்றும் என் தேசத்தில் ..... ம.பிரவீன் 4) சாமியை சாதியாக்கி  சாதியை கெளரவமென்று  பாசத்தை பரிகொடுத்தான்  நேசமில்லா என் தேசத்தில் ......  ம.பிரவீன் 5) கற்பனை வாழ்க்கையை கண்ணெதிரே காட்டி காட்டி  கண்ணாமூச்சி ஆடுகிறது இந்த இரவு நேர கனவு ... ம.பிரவீன் 6) நீ கோப படும் அந்த ஒரு நிமிடம் தான் ...  உன் அறுபது விநாடி சந்தோஸத்தை சாகடிக்கிறது .. ம.பிரவீன் 7) சல்லடை சாரலில் சிலிர்குது அவள் தேகம். சிலை போல இருந்தாலும் அவளும் உயிர...

கடவுள் குறிப்பு

பள்ளிக்கூட காலத்தில்  பருவ காதல்  தொடங்கியது உன் மீது ... உன் கரிய விழி கண்ணாலே  என் கண்ணை பறித்தெடுத்தாய் காதல் எனும் வசியத்தால் ... அழகான உடையணிந்து இடுப்பளவு கூந்தலிலே நீ பவனி வரும் அழகிற்கு பதுமையவள் பதுங்கி போவாள் உன்னிடத்தே பயிற்ச்சி எடுப்பாள்.. தினம் தினம் உனக்காக நான் உருகிய காலத்தை கடவுளவன் குறிப்பெடுப்பான் பின்னாளில் உனக்களிப்பான் ...

உன் ஒற்றை புன்னகை போதுமடி ....

உன் ஒற்றை புன்னகை போதுமடி ஆயிரம் கவிகள் தினம் படைப்பேன் ... உன் மேல் ஒட்டிய கடிகாரம் உன் முகம் பார்த்தே தினம் ஒடுதடி ... சிவந்த மேனி உடலழகை  சிறு காற்றும் கூட உரசுதடி ... சிரித்து பேசும் உதட்டழகை சித்திரை நிலவும் ரசிக்குதடி ... நீ வெட்கப்பட்டு தலை குனிந்தால் வானம் கூட நீர் வடிக்கும் ... கோபப்பட்டு தலை நிமிர்ந்தால் மின்னலேன சுட்டெரிக்கும் ... உன்னை பார்த்த நொடி பொழுதில் என்னை மறந்து பின் தொடர்ந்தேன் ... தொடர்பு கிடைக்கும் முன்னே தொடர்பை விட்டு தூரம் சென்றாய் துரத்தி வந்தேனும் உன் மனம் தொடுவேனடி என் ஆருயிரே .... ம.பிரவின்

அம்மா .....

இருட்டான உலகத்தில் இன்பமாய் படுத்திருந்தேன்.. கண் கூட திறக்கவில்லை காற்றோடு பேசி வந்தேன் ... கால் கொண்டு உதைத்தாலும் தடவியபடி சிரித்தாயே ... காணாத என் முகத்தை கற்பனையில் வரைந்தாயே ... கருப்பான கருவுலகில் திசை மாறி நின்ற போதும் ... காற்றுப்பை கையில் கொண்டு செவிலித்தாய் இழுத்த போதும் ... கதறிய உன் கதறலுக்கு கடவுளும் கலங்கி போவான் ... கருணையில் கண்ணீர் வடிப்பான் லேசான வெளிச்சத்தில் வெளிவுலகம் தெரியுதம்மா ... கண் மூடிய உன் முகமும் காற்றோடு  கலந்ததென்று என் மனம் சொல்லுதம்மா .. கண்ணீர் விட்டு அழுகுதம்மா ... ம.பிரவின்

தனிமை

தனிமை சோகத்தின் கூட்டாளி சில நேரம் சிரிக்க வைக்கும் பல நேரம்  புலம்ப வைக்கும் கண்களிலும் கடல் நீர் வடியும் கானகமும் கருப்பாய் தெரியும் சாப்பிடும் நேரம் சற்றே நீளும் சந்திர நிலவும் சரிகம பாடும் ஒரு நாள் தனிமை இன்பம் பொங்கும் பல நாள் தனிமை வேறென்ன பைத்தியம் புடிக்கும்

இரவு நேர இரயில் பயணம்

அரைகால் சட்டையுடன் மீசை வலித்து குறுந்தாடியுடன் அகோர முகம் அயல் நாட்டவன் விட்டு சென்ற அரைகுறை விந்தனுவில் பிறந்தவன் போலும் பெண்ணை கண்டிராத அவன் கண்களும் காமத்தால் சுழன்றன அவனது வாய்பேச்சில் வயதோரும் வாயடைத்து சிரித்தனர் அவளும் சிரித்தாள் அவனை பற்றி எழுதிய என் விரல்கள் அவளை பற்றியும் எழுத துடித்தது உண்மையில் நான் அவளை சரியாக ரசிக்கவில்லை காரணம் அவள் அவனை ரசித்து கொண்டிருந்தால் இருந்தாலும் நான் என் பணியை செய்தேன் அவளின் இமை அசைவில் அவள் அழகியென்ற ஆங்காரம் அவள் இதழ் சிரிப்பில் கொஞ்சம் சிலிர்த்து தான் போனது என் நெஞ்சம் கை விரலும் கதை பேசும் கண் அசைவும் கவிதை பாடும் அவளை நேர்கொண்டு ரசித்திருந்தால் கவிதையாய் வர்னித்து இருப்பேன் அசதியின் காரணமோ என்னவோ என் எதிரே அவள் இருந்தும் என் விழிகள் அவளை காணாமல் சுருங்கியது - இரவு நேர இரயில் பயணம்
எனது அறையில் என்னுடன் இருக்கும் நண்பர் ஒருவர் வெகுமாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தார் . அவரை போல் சுறுசுறுப்பான ஒருவரை நான் கண்டதில்லை. தினமும் ஏதாவது ஒரு இடத்திற்க்கு நேர்காணலுக்கு செல்வார் .  காலை முதல் மாலை வரை இடைவிடாத தேடல் பிறகு அறைக்கு வந்து அன்றாட பணிகளை செய்துவிட்டு அசதியில் உறங்குவார் . ஒரு நாள் என்றால் பரவாயில்லை கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் . போகும் இடமெல்லாம் பிறகு அழைக்கிறோம் என்ற ஆறுதல் பதிலே அவருக்கு மிஞ்சியிருந்தது.  அவர் பொறியியலில் இயந்திரவியல் என் பது நான் அறிந்ததே.  அவரிடம் நிறைய முறை கேட்டுள்ளேன் உங்கள் துறையில் வேலை கிடைக்காமல் இவ்வளவு சிரமபடுவதற்கு பேசாமல் ஏதாவது சாப்ட்வேர் நிறுவனத்தில் முயற்சி செய்து பாருங்கள் என்று.. அவரும் இனி அப்படிதாங்க முயற்சி பண்ணனும் என்பார் .  ஆனால் மறுநாள் மறுபடியும் அவர் துறை சார்ந்த கம்பெனிக்கே வேலை தேடி அலைவார். படித்த படிப்பிற்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் பாதிக்கு பாதி வேலையின்றி அலைவார்கள் . படித்த படிப்பிற்கு உதவாத வேலையை செய்யும் தலைமுறையில் தான் இன்றளவும் நாம் ...

கவிதையும் ரசிகனும்•••~•••

கவிதையும் ரசிகனும்•••~••• அழகான கவிதைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன ... கவி படைத்தவனும் காவலுக்கு நின்று கொண்டிருந்தான் ... ஒரிரு கவிதைகள் மட்டும் பார்த்தவுடன் பற்றி கொள்ளும் ... அதிலும் ஒரு சில கவிதைதான் என் விழிகளை வழிப்பறிச் செய்யும் ... அந்த கவிதையை படிப்பதற்கே பலநூறு வருடம் தவம் கிடக்க வேண்டும் ... நானும் பிற்கால கவி படைப்பவன் தான் என்றாலும் இப்போது ரசிகன் என்ற முறையில் அந்த கவிதையை ரசித்தாக வேண்டிய கட்டாயம் ... அந்த அழகிய கவிதையை படைத்தவன் மட்டும் , அதை விட்டு மெல்லவெளியே நகர்ந்தான் .. அந்த கவிதையின் எதிரே ரசிகனாக நான் மட்டும் . கவிதையின் பெயர் அழைக்கப்பட்டது .. அடுத்து ரசிகனாக என் பெயரும் அழைக்கப்பட்டது ... மீண்டும் அந்த கவிதையின் எதிரே நான் மட்டும் ... முடிவுகள் ஒட்டபட்டது .. கவிதையின் பெயருக்கு கீழே ரசிகன் என்பதால் என் பெயரும் ஒட்டப்பட்டிருந்தது .. வெளியே சென்ற அந்த கவிதையை படைத்தவன் ஒட்டப்பட்ட கவிதையின் பெயரை பார்த்தவுடன் ஆனந்தத்தில் திளைத்து கொண்டிருந்தான் ... முடிவில் , அந்த கவிதையாக அவளும் அந்த ரசிகனாக நானும் ஒட்டப்பட்ட பெயர்களுடன் ஒரே நிற...
இன்று மாலைஅலுவலகம் முடிந்து பேருந்திற்க்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் . வெகுநேர காத்திறத்தலுக்குபிறகு அதிகமான கூட்டத்துடன் வந்த பேருந்தில் முட்டி மோதி வியர்வை ஒழுக எப்படியோ ஏறிவிட்டேன். கூட்டம் அதிகமானதால் எனது மடிக்கணிணி பையை அருகில் அமர்ந்திருந்த முதியவரிடம் வைத்திருக்குமாறு கூறினேன் . அவரோ சென்னை செந்தமிழை பதிலாக அளித்தார் . நல்லா இருப்பிங்க நீங்க என்று மனதார வாழ்த்திவிட்டு அடுத்த இருக்கையை பார்த்தேன். வடநாட்டு வாலிபன் ஒருவன் கொடுங்க அண்ணா என்று நான் கேட்காமலையே வாங்கி வைத்து கொண்டான் . அந்த முதியவரை பற்றிகூட நான் அதிகம் சிந்திக்கவில்லை . ஆனால் இந்த நிகழ்விற்கு முன் வரை வடநாட்டு இளைஞர்களை எங்கு கண்டாலும் காரணமின்றி என் வாய் அதுவாக வசைப்பாடும் . இன்று அந்த வடநாட்டு இளைஞனின் செய்கை என்னை கொஞ்சம் சிந்திக்கதான் வைத்துவிட்டது .அதே சிந்தனையோடு அந்த இளைஞனுக்கு நன்றி சொல்லிவிட்டு பேருந்தைவிட்டு இறங்கினேன் . சாதரன உதவிக்கே சலித்துக்கொள்கிறது இந்த சிங்கார சிட்டியின் மக்கள் கூட்டம் என்ற மன வருத்தத்துடன் ....
இன்று பள்ளிகால நண்பன் ஒருவன் நெடுநாட்களுக்கு பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான் . அழைப்பு வந்தவுடனே அறிந்துகொண்டேன் எதோ காரியம் வேண்டி தான் அழைகிறான் என்று , ஏனென்றால் எனக்கான நட்பு வட்டத்தில் காரியக்கார நண்பர்கள் கொஞ்சம் அதிகம் தான் . அவன் நலம் விசாரித்த நடைமுறையிலையே அவனின் சோகமும் தெரிந்தது . நானும் நிலைமையை புரிந்துகொண்டு பிரபா ஏதாவது பிரச்சனையா என்றேன் . சற்று தடுமாற்றத்துடன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அவனிடமிருந்து அழுகை மட்டுமே பதிலாக வந்தது. நான் என்ன செய்வதென்று புரி யாமல் சமாதான வார்த்தைகளை சராமாரியாக சொல்லி கொண்டிருந்தேன். சோகத்தில் ஆறுதல் கூறுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது வலிக்காமல் வலிக்கும் . இதை அனுபவரீதியாக பலமுறை உணர்ந்துள்ளேன் . இருந்தும் ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அதுவும் அழுகும் போது ஆறுதல் கூறுவது ஆறாம்அறிவின் இயல்பே. அவனிடம் என்னதான்டா உனக்கு பிரச்சன இப்ப , எதுக்கு அழுகுற என்று சற்று கடிந்துகொண்ட பின் அவன் சோகக்கதையை சொல்ல துவங்கினான். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று. அதுவும் எதிர்ப்பை மீறிய காதல் திருமணமாம...
வெகுளியான திறமைசாலிகளை வைத்தே வேகமாக வளர்கிறது இந்த ஐ.டி நிறுவனங்கள் ...
#‎ இதுவும்_கடந்து_போகும்‬ வாழ்வில் பற்பல சிந்தைனையுடன் வாழும் இளைஞனின் வாழ்க்கையை புரட்டி பார்த்தால் தோல்வியை மட்டுமே தோளாக கொண்டிருப்பான்.வெளி உலகிற்கு மகிழ்ச்சியை மாயையாய் காட்டி , உள்ளூர துன்பம் என்னும் நெருப்பில் வெந்துகொண்டிருப்பான் . இது பொதுவான கூற்றுதான்ஆனால் அனைவருக்கும் பொருந்தகூடியது. பணத்தை தேடுபவன் பாசத்தை துறந்திருப்பான் , பாசத்தை நிலையென கொண்டவன் கடனாளி என்ற மறுபெயர் பெற்றிருப்பான் . இவ்விரண்டையும் சமநிலையாக கையாள்பவனை இதுவரை இவ்வுலகம் கண்டிருக்காது கண்டிருக்க ும் வாய்ப்புகளும் குறைவுதான். வெற்றி பெற்ற ஓவ்வொரு மனிதனின் ஆயுள்புத்தகத்தை புரட்டி பார்த்தால் வேதனை என்ற ஒற்றை சொல்லே சோகவாசகமாய் முழுப்புத்தகமும் நிறைந்திருக்கும். வரும் வேதனையை நினைத்து வெம்பி அழுது இடுகாடுவரை வெத்து உடலோடு சென்ற உத்தமர்களும் இங்கு ஏராளம்தான் . அவர்களை புதைகுழிக்குள் தள்ள எப்போதும் வாயை பொழந்துகொண்டு திரியும் உறவுகள் எனும் கொடுங்கொள்ளி கூட்டம் தான் அந்த உத்தமர்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கும் உயிருடன் இருக்கும் போது . இங்கே சாதிப்பவன் எல்லாம் கட்டாயம் அரை ஆயுள் தோல்வியில் புரண்டிரு...
இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...
நீ உனக்கான பாதையை தொடங்கும் போதே...  உன்னை ஏளனம் செய்ய ஏராளம் பேர் வரிசைகட்டி நிற்க கூடும், உறவுகளாய் , நண்பனாய் , பெற்றோராய் , மாற்றானாய் ... அதற்காக வருந்தாதே உன் முடிவில் தெளிவாய் இரு ... வருங்காலம் வரக்கூடும் உன்னை வெற்றியாளனாய் மாற்ற ..
வாழ்க்கையில் சிறிய நேரத்தை கூட உன் வருங்கால கனவுகளுக்கு செலவிடு... நீ தினம் காணும் , உன் கனவுகளுக்கு மட்டும் தான் அதை செயல்படுத்தும் திறன் மிக அதிகம்..
புதுப்புது அர்த்தங்களோடு பலமுகம் கொண்ட கொடூரவாசிகள் வாழும் உலகம் இது.நிழலான வாழ்க்கையைதான் பணமான நிஜத்துக்குள் திறக்கமுடியா பூட்டிட்டு திறமையென நினைக்கின்றனர். இதை தவறென்று சொல்ல எனக்கு சற்றும் துணிவில்லை தான் , ஏனென்றால் அந்த நிழனான வாழ்க்கையை தான் நிஜமென நினைத்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் என்ற ஒற்றைசொல்லை வாழ்வின் நாமமாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன கொடூரவாசிகள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்.அவர்கள் தான் உதவி என்று யாரேனும் கேட்டால் கூட இஞ்சி  தின்ற குரங்கைபோல் முகத்தை உடனே மாற்றுவார்கள். இதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். இந்த குரங்கு கூட்டத்தில் உறவினர்களும் விதிவிலக்கல்ல. உண்மையாக சொல்ல போனால் அவர்கள் தான் நம்மைசுற்றி கொண்டே இருக்கும் கொடூரகுரங்குகள் இதில் ஒரு சில நல்ல குரங்குகள் இருப்பதும் இயற்பியல் மாற்றம் தான். இந்த கொடூரவாசிகளில் அதுவும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆத்மாக்களுக்கு ஆணவம் இருப்பது இயல்பான ஒன்றுதான் , என்றாலும் கூட கிராமத்து கன்னியையும் கிளாமராக தான் மாற்றுகிறது இந்த நாகரீக நகரமும் , அறிவான ஐ.டி நிறுவனமும் . உள்ளூ...
பரப்பரப்பாக அங்கும் இங்கும் நடந்தவாரே கையில் இருந்த புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான் . அவன் முகம் பயத்தில் உறைந்து வியர்வையில் நனைந்திருந்தது. முதல் கேம்பஸ் நேர்காணல் அதுவும் மிகப்பெரிய கம்பெனி அதில் தேர்வானால் அவன் வாழ்க்கை பிரகாசமாக ஓரங்கட்டி விடப்படும். அவன் குடும்பம் குதூகலத்தில் துள்ளிகுதிக்கும் . அவன் தந்தை தர்மத்தின் தலைவனாய் ஊரே போற்ற கொண்டாட படுவார் . தாயோ கடவுள் தான் காரணம் என்று கண்ணீரில் மிதந்திருப்பார். ஆனால் இவையெல்லாம் அவன் தேர்வான அந்த நொடியில் தான் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். அவனுக்கு நன்றாக தெரியும் அவனின் ஆங்கில புலமையை பற்றி , நம்மை ஆண்டவன் அழிந்தாலும் அவன் விட்டுசென்ற ஆங்கிலம் இன்றும் நம்மை ஆண்டுகொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இதுவே சாலசிறந்த உதாரணம் . நேரம் நெருங்க நெருங்க நேர்காணல் அறை இன்னும் பரப்பரப்பானது அவன் மட்டுமல்ல அங்கிருக்கும் வருங்கால அடிமைகள் அத்துனை பேருக்கும் அதே பதட்டம்தான் மந்திரமாய் ஓலித்துகொண்டிருக்கும். ஒரு வேளை தேர்வாகாமல் போனால் அதை எப்படி கையாள்வது என்பதை கூட கற்று கொடுக்காத கையாளாகாத கல்வியை தான் வருங்காலபாரதத்திற்கு மன அழ...
Most of the time i come across people living life defined by others. Then you are like a vegetable. Tossed and cooked to satisfy others taste. You don't live for anyone except yourself, you own your life's GOOD, BAD and UGLY. When you own you define a purpose to your life. The world around you becomes beautiful and you start searching and seeking for adventure.
நீ சாதிக்கமாட்டாய் என்று ஏளனிக்கும் உன் உறவுகளுக்கு முதலில் நன்றியை சொல்லிகொள் ... ஏனென்றால் அந்த ஒற்றை வார்த்தை தான் உன் இலக்கிற்கான உத்வேகத்தை அதிகபடுத்தி உன்னை சாதனையாளனாக்கும்..
கடவுள் மீது எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை தான் , என்றாலும் நம்பிக்கை என்னும் ஒரு உணர்விற்கு கடவுள் என்று பெயரிடுவதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.