புதுப்புது அர்த்தங்களோடு பலமுகம் கொண்ட கொடூரவாசிகள் வாழும் உலகம் இது.நிழலான வாழ்க்கையைதான் பணமான நிஜத்துக்குள் திறக்கமுடியா பூட்டிட்டு திறமையென நினைக்கின்றனர். இதை தவறென்று சொல்ல எனக்கு சற்றும் துணிவில்லை தான் , ஏனென்றால் அந்த நிழனான வாழ்க்கையை தான் நிஜமென நினைத்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் என்ற ஒற்றைசொல்லை வாழ்வின் நாமமாக வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மேலே சொன்ன கொடூரவாசிகள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்.அவர்கள் தான் உதவி என்று யாரேனும் கேட்டால் கூட இஞ்சி தின்ற குரங்கைபோல் முகத்தை உடனே மாற்றுவார்கள். இதை பலமுறை அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். இந்த குரங்கு கூட்டத்தில் உறவினர்களும் விதிவிலக்கல்ல.
உண்மையாக சொல்ல போனால் அவர்கள் தான் நம்மைசுற்றி கொண்டே இருக்கும் கொடூரகுரங்குகள் இதில் ஒரு சில நல்ல குரங்குகள் இருப்பதும் இயற்பியல் மாற்றம் தான்.
இந்த கொடூரவாசிகளில் அதுவும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஆத்மாக்களுக்கு ஆணவம் இருப்பது இயல்பான ஒன்றுதான் , என்றாலும் கூட கிராமத்து கன்னியையும் கிளாமராக தான் மாற்றுகிறது இந்த நாகரீக நகரமும் , அறிவான ஐ.டி நிறுவனமும் .
உள்ளூர நஞ்சை வைத்துகொண்டு பொய்முகம் காட்டி நம்ப வைக்கும் நாரதர் கூட்டமும் , உண்மைமுகம் என்று சொல்லி மனதை நோகடிக்கும் உத்தமர் கூட்டமும் இந்த கொடூரவாசிகளில் என்றும் முதலிடம் தான் .
இதைபற்றி நினைத்து மனம் வெம்புவதை விட கொடூரவாசிகளோடு சேர்ந்து கொடூரவாசியாய் வாழ்வதே சாலசிறந்து.
Comments
Post a Comment