வாழ்வில் பற்பல சிந்தைனையுடன் வாழும் இளைஞனின் வாழ்க்கையை புரட்டி பார்த்தால் தோல்வியை மட்டுமே தோளாக கொண்டிருப்பான்.வெளி உலகிற்கு மகிழ்ச்சியை மாயையாய் காட்டி , உள்ளூர துன்பம் என்னும் நெருப்பில் வெந்துகொண்டிருப்பான் . இது பொதுவான கூற்றுதான்ஆனால் அனைவருக்கும் பொருந்தகூடியது.
பணத்தை தேடுபவன் பாசத்தை துறந்திருப்பான் , பாசத்தை நிலையென கொண்டவன் கடனாளி என்ற மறுபெயர் பெற்றிருப்பான் . இவ்விரண்டையும் சமநிலையாக கையாள்பவனை இதுவரை இவ்வுலகம் கண்டிருக்காது கண்டிருக்கும் வாய்ப்புகளும் குறைவுதான்.
வெற்றி பெற்ற ஓவ்வொரு மனிதனின் ஆயுள்புத்தகத்தை புரட்டி பார்த்தால் வேதனை என்ற ஒற்றை சொல்லே சோகவாசகமாய் முழுப்புத்தகமும் நிறைந்திருக்கும். வரும் வேதனையை நினைத்து வெம்பி அழுது இடுகாடுவரை வெத்து உடலோடு சென்ற உத்தமர்களும் இங்கு ஏராளம்தான் . அவர்களை புதைகுழிக்குள் தள்ள எப்போதும் வாயை பொழந்துகொண்டு திரியும் உறவுகள் எனும் கொடுங்கொள்ளி கூட்டம் தான் அந்த உத்தமர்களின் நம்பிக்கையாய் இருந்திருக்கும் உயிருடன் இருக்கும் போது .
இங்கே சாதிப்பவன் எல்லாம் கட்டாயம் அரை ஆயுள் தோல்வியில் புரண்டிருக்க வேண்டும் , வாரத்திற்கு ஒருமுறை தனி அறையில் தன்னந்தனியே கண்கள் கலங்க கதறி அழுக வேண்டும் , முகத்தை சோகத்தால் பரப்ப வேண்டும் , வெற்றிபெற்றவனை பார்த்து பொறாமையும் , தோல்வி அடைந்தவனை பார்த்து இரக்கமும் கொள்ள வேண்டும் , எனக்கு இங்கு யாருமில்லை என்ற உணர்வை தினமும் மனதில் விதையாக விதைக்க வேண்டும் இப்படியெல்லாம் உழைத்தால் தான் சாதிக்க முடியும் என்றால் சர்வ நிச்சயமாக இல்லை .
சாதனை படைத்த சாதுரியர்கள் எல்லாம் கண்டிப்பாக இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் சிந்தனை வேறுமாறியானது . மன உறுதியை மாற்றுயிராய் கொண்டிருப்பார்கள். என்னை பொறுத்த வரை மன உறுதி என்ற ஒற்றை சொல்லே போதுமானது தான் இந்த கேடுகெட்ட உலகில் வாழ்வதற்கு ...
Comments
Post a Comment