இன்று மாலைஅலுவலகம் முடிந்து பேருந்திற்க்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் .
வெகுநேர காத்திறத்தலுக்குபிறகு அதிகமான கூட்டத்துடன் வந்த பேருந்தில் முட்டி மோதி வியர்வை ஒழுக எப்படியோ ஏறிவிட்டேன்.
கூட்டம் அதிகமானதால் எனது மடிக்கணிணி பையை அருகில் அமர்ந்திருந்த முதியவரிடம் வைத்திருக்குமாறு கூறினேன் . அவரோ சென்னை செந்தமிழை பதிலாக அளித்தார் . நல்லா இருப்பிங்க நீங்க என்று மனதார வாழ்த்திவிட்டு அடுத்த இருக்கையை பார்த்தேன்.
வடநாட்டு வாலிபன் ஒருவன் கொடுங்க அண்ணா என்று நான் கேட்காமலையே வாங்கி வைத்து கொண்டான் . அந்த முதியவரை பற்றிகூட நான் அதிகம் சிந்திக்கவில்லை .
ஆனால் இந்த நிகழ்விற்கு முன் வரை வடநாட்டு இளைஞர்களை எங்கு கண்டாலும் காரணமின்றி என் வாய் அதுவாக வசைப்பாடும் . இன்று அந்த வடநாட்டு இளைஞனின் செய்கை என்னை கொஞ்சம் சிந்திக்கதான் வைத்துவிட்டது .அதே சிந்தனையோடு அந்த இளைஞனுக்கு நன்றி சொல்லிவிட்டு பேருந்தைவிட்டு இறங்கினேன் .
சாதரன உதவிக்கே சலித்துக்கொள்கிறது
இந்த சிங்கார சிட்டியின்
மக்கள் கூட்டம் என்ற மன வருத்தத்துடன் ....
இந்த சிங்கார சிட்டியின்
மக்கள் கூட்டம் என்ற மன வருத்தத்துடன் ....
Comments
Post a Comment