Skip to main content
பரப்பரப்பாக அங்கும் இங்கும் நடந்தவாரே கையில் இருந்த புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தான் . அவன் முகம் பயத்தில் உறைந்து வியர்வையில் நனைந்திருந்தது.
முதல் கேம்பஸ் நேர்காணல் அதுவும் மிகப்பெரிய கம்பெனி அதில் தேர்வானால் அவன் வாழ்க்கை பிரகாசமாக ஓரங்கட்டி விடப்படும்.
அவன் குடும்பம் குதூகலத்தில் துள்ளிகுதிக்கும் . அவன் தந்தை தர்மத்தின் தலைவனாய் ஊரே போற்ற கொண்டாட படுவார் . தாயோ கடவுள் தான் காரணம் என்று கண்ணீரில் மிதந்திருப்பார்.
ஆனால் இவையெல்லாம் அவன் தேர்வான அந்த நொடியில் தான் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும்.
அவனுக்கு நன்றாக தெரியும் அவனின் ஆங்கில புலமையை பற்றி , நம்மை ஆண்டவன் அழிந்தாலும் அவன் விட்டுசென்ற ஆங்கிலம் இன்றும் நம்மை ஆண்டுகொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இதுவே சாலசிறந்த உதாரணம் .
நேரம் நெருங்க நெருங்க நேர்காணல் அறை இன்னும் பரப்பரப்பானது அவன் மட்டுமல்ல அங்கிருக்கும் வருங்கால அடிமைகள் அத்துனை பேருக்கும் அதே பதட்டம்தான் மந்திரமாய் ஓலித்துகொண்டிருக்கும்.
ஒரு வேளை தேர்வாகாமல் போனால் அதை எப்படி கையாள்வது என்பதை கூட கற்று கொடுக்காத கையாளாகாத கல்வியை தான் வருங்காலபாரதத்திற்கு மன அழுத்தமாய் விதைத்து கொண்டிருக்கிறோம்.
என்றாலும் கூட
அவன் பெயர் அறிவிக்கபட்டுவிட்டது.
முதல் நேர்காணலை எதிர்கொள்ள தயாராய் அவன் கால்கள் மெல்ல நகர்ந்தது . இஸ்திரி போட்ட ஆடையும் வியர்வையில் ஊறிப்போயிருந்தது.
நேர்காணல் அறைக்குள் மூன்று உருவங்கள் , தெய்வமான முன்னாள் அடிமைகள் என்றும் கூட கூறலாம் கால்மேல் காலிட்டு கம்பீர தோரனையில் மிடுக்காய் அமர்ந்திருந்தன.
இவனும் தனக்கான நடையை மறந்து தயக்கமான நடையில் அருகில் சென்றான் , தான் இதுவரை பெற்ற பணம் தரும் சான்றிதழ் பட்டாக்களை அவர்கள் முன் நீட்டினான்.
முன்னாள் அடிமைகளில் ஒருவன் தனக்கான சைகையில் அவனை அமர சொன்னான் . பின் மூன்று முன்னாள் அடிமைகளும் அவர்களை அறிமுகம் செய்துவிட்டு , இவனின் அறிமுகத்தை கேட்டனர் .
ஓய்வெடுத்து கொண்டிருந்த வியர்வை சுரபிகள் மீண்டும் சுனாமியாய் வெளிவர துவங்கின. பத்து விநாடி யோசித்த அவன் மூளை தன் மண்டைக்குள் ஏற்றிய அவனின் அறிமுக மனப்பாடத்தை வாய்வழியே தங்குதடையின்றி கொட்டி தீர்த்தது .
அவன் தேர்வாவதும் தேர்வாகாமல் தெருவில் நிற்பதும் அடுத்த கதை , தன்னை பற்றிய அறிமுகத்தை கூட மண்டையில் ஏற்றி , மனப்பாடம் செய்தா ஒப்பிக்க வேண்டும் . ஒரு வேளை அப்படி மனப்பாடம் செய்து ஒப்பிக்க தான் இந்த சமூகமும் , கல்வியும் அவனுக்கு கற்றுகொடுத்திருக்கிறதா என்றால், அதன்வழியே வந்தவன் என்ற முறையில் அதுதான் நிச்சயமான உண்மை .
முன்னாள் அடிமைகளின் குரல் அவன் தேர்வாகி விட்டதாய் ஒலித்தது . பின்னாள் அடிமையாக போகிறோம் என்ற மகிழ்ச்சியில் அவன் மனம் முழுக்க மத்தாப்பு வெடித்து.
வருடாந்திர அடிமையாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு
அடுத்த மாதம் வேலையில் சேரலாம் என்று ஒரு கடிதமும் அளிக்கப்பட்டது.
மாதம் முப்பதாயிரம் சம்பளம் என்றாலும் மனப்பாட மூளையையும் அதை ஒப்புவிக்கும் மனதையும் வைத்துகொண்டு வாழ்க்கையை சாதித்து விட்டோம் என என்னும் அவனின் எண்ணம் நம் சமூகம் அவனுக்கு அளித்த பரிசு .
இந்த தலைமுறை மட்டுமல்ல இனி வரும் வருங்கால பிஞ்சுகளுக்கும் , கல்வியை பணத்திற்காக அடமான வைக்கும் காவுபொருளாக தான் கற்றுகொள்ள கற்பித்திருக்கிறோம்.
அதன் வெளிப்பாடே இக்கால இயந்திர மனிதர்கள் ... இனியாவது இந்நிலை மாறட்டும் என்ற ஏக்கத்தில் இக்கால இயந்திர மனிதன் ..

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

ஏன் இந்த தோல்வி ?

திட்டமிடல்  ஆயிரகணக்கான தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் அடியெடுத்து வைத்தாலும் அதில் வெகுசிலரே வெற்றி என்னும் வேட்கைக்கு மிக அருகில் செல்கின்றனர்.இதற்க்கான முழுமுதல் காரணமே திடமான திட்டமிடல்  இல்லாதது தான். திட்டமிடல் என்பது வெறும் பணம் சம்மந்தப்பட்ட  விஷயம் அல்ல. தனக்கு இந்த தொழில் சரியாக அமையுமா சரியாக அமையாவிட்டால் என்ன செய்வது என்று சிறு சிறு விசையங்களை கூட எழுத்தாக்க வழியில் திட்டமிட்டு செய்தால் ஒழிய இக்கால சூழ்நிலையில் மேடுருவது மிக கடினம் . எதிர்பார்ப்பு  சரியாக திட்டமட்ட பல  தொழில்முனைவோர்கள் இந்த எதிர்பார்ப்பு என்னும் சுழலுக்குள்  சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவார்கள் . எதிர்பார்ப்பு என்பது தொழில் துவங்கிய சில காலங்களிலே பெரிதாக எதிர்பார்ப்பது. அதில் தவறேதும் இல்லை என்றாலும் இப்பொது முத்திரை பதித்த தொழில்முனைவோர்கள் வாழ்க்கையை புரட்டி பார்த்தல் அவர்கள் இன்றும் கூட எதிர்பார்ப்பு இல்லா யதார்த்தத்தை வெளிகாட்டுவர்கள் . எல்லையில்லா கனவு  இங்கு உள்ள பல வளரும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய கனவிற்கு  ஒரு எல்லைகோட்டை  தீர்மானி...

‪வீட்டிற்குள்‬ ‪சிறைவாசம்‬

சின்ன சின்ன வயதில் தான் செல்லமாய் வளர்த்து வந்தான் கேட்டவை அனைத்தையும் நான் கேட்காமல் வாங்கி தந்தான் பூப்பெய்திய நாளில் தான் தொடங்கியது என் போராட்டம் ஆறு மணி ஆனதுமே அரக்கபறக்க ஓட வேண்டும் ஆறு ஐந்து ஆனாலே ஆக்ரோசமாய் குரைத்திடுவான் தலை குனிந்து நடந்தாலே தரித்திரங்கள் போய் விடுமாம் தலை நிமிர்ந்த ஒரு கனம்தான் என் தலைவனை கண்டுகொண்டேன் நான் ரசித்த முதல் ஆண் என்னை ரசித்த முதல் ஆண் என்பதிலே எனக்கொரு கர்வம் தான் சொந்தகார சகுனிகளால் விசயமும் கசிந்து விட வளர்த்தவனும் விஷமியானான் வீட்டிற்குள் சிறை வைத்து அதற்குமொரு காவலிட்டு கருந்தேளாய் கொட்டுகிறான் காதலித்த கொடுமைக்காக ... நான் ரசித்தவனும் ஒதுங்கி விட என் மூளையும் கொஞ்சம் குழம்பி போனது .. இதில் யாரை குறை சொல்ல என்னை வளர்த்தவனையா இல்லை நான் ரசித்தவனையா குளம்பி போன இக்கன்னிக்கு வீட்டிற்குள்ளே சிறைவாசம் கன்னித்தீவாய் தொடர்கிறது...