Skip to main content

வாழ்க்கையின் தேடல் ...

வாழ்க்கையின் தேடலில் துவங்கினான் அவன் பயணத்தை ... 
பொறியியல் எனும் பொல்லாத படிப்பிற்கு 
லட்ச ரூபாய் நோட்டோடு 
கட்டுக்கட்டாய் பணம் கொடுத்து
 களையாத உடையணிந்து 
கல்லூரி வாசலிலே 
ஆபிசர் உடையோடு .... 
வீரப்பன் நடையிலே 
வீரமாக வீரெழுந்தான் ... 
வேரோடு அறுத்துவிட்டான் ... 
வேலையில்லை என்று சொல்லி .. 
மனஅழுத்தம் என்ற சொல்லிற்கு 
மறுபெயரே நாங்கள் தான் ... 
நினைத்த வேலை கிடைக்காமல் ... 
கிடைத்த வேலை பிடிக்காமல் ... 
தினம் தினம் அழுகிறோம் மனதுக்குள் 
பொறியியல் எனும் பொறி வைக்கும் படிப்பிற்கு
 பலியாவது நாங்கள் தானா ... 
இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் சான்றோனே ... 
பட்டதாரி நிலை மாறட்டும் என் நாட்டில் 
வேலையில்லா திண்டாட்டம் ஓழியட்டும் என் மண்ணில் .. 
பின் நிலை உயரும் ... 
என் நாட்டின் நிலை உயிரும் ... 
வருங்காலம் பெயர் சொல்லும் 
இந்த பாவப்பட்ட பட்டதாரியின் வாழ்க்கையை பற்றி ... 
அது வரை கை ஏந்துவோம் அந்நியவன் முகம் பார்த்து ... 
அயல்நாட்டை எதிர்நோக்கி ... 
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கேட்ட கவிஞனே ... 
மனம் நொந்து .. 
விழிகள் அழுது .. 
நெஞ்சம் உருகி .. 
சொல்கிறேன் கேள் .. 
எந்த வளமும் இல்லை என் தாய் நாட்டில் ஊழல் என்ற வளத்தை தவிர ... 
பொங்கி எழுந்த பொறியாளன் கூட்டத்தில் .. 
வீரத்தமிழன் வேதனையில் எழுதுகிறேன் ....
ம.பிரவீன்

Comments

Popular posts from this blog

பனியோடு ஓர் நாள்

பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது. பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை புகைக்குள் என் உ தடுகள், முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு. நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து. காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம். நேரம் ஆக ஆக வெள்ள...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...