இன்று பள்ளிகால நண்பன் ஒருவன் நெடுநாட்களுக்கு பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான் . அழைப்பு வந்தவுடனே அறிந்துகொண்டேன் எதோ காரியம் வேண்டி தான் அழைகிறான் என்று , ஏனென்றால் எனக்கான நட்பு வட்டத்தில் காரியக்கார நண்பர்கள் கொஞ்சம் அதிகம் தான் .
அவன் நலம் விசாரித்த நடைமுறையிலையே அவனின் சோகமும் தெரிந்தது . நானும் நிலைமையை புரிந்துகொண்டு பிரபா ஏதாவது பிரச்சனையா என்றேன் . சற்று தடுமாற்றத்துடன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அவனிடமிருந்து அழுகை மட்டுமே பதிலாக வந்தது.
நான் என்ன செய்வதென்று புரியாமல் சமாதான வார்த்தைகளை சராமாரியாக சொல்லி கொண்டிருந்தேன். சோகத்தில் ஆறுதல் கூறுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது வலிக்காமல் வலிக்கும் . இதை அனுபவரீதியாக பலமுறை உணர்ந்துள்ளேன் . இருந்தும் ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அதுவும் அழுகும் போது ஆறுதல் கூறுவது ஆறாம்அறிவின் இயல்பே.
நான் என்ன செய்வதென்று புரியாமல் சமாதான வார்த்தைகளை சராமாரியாக சொல்லி கொண்டிருந்தேன். சோகத்தில் ஆறுதல் கூறுவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்றது வலிக்காமல் வலிக்கும் . இதை அனுபவரீதியாக பலமுறை உணர்ந்துள்ளேன் . இருந்தும் ஒருவர் சோகத்தில் இருக்கும்போது அதுவும் அழுகும் போது ஆறுதல் கூறுவது ஆறாம்அறிவின் இயல்பே.
அவனிடம் என்னதான்டா உனக்கு பிரச்சன இப்ப , எதுக்கு அழுகுற என்று சற்று கடிந்துகொண்ட பின் அவன் சோகக்கதையை சொல்ல துவங்கினான். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று. அதுவும் எதிர்ப்பை மீறிய காதல் திருமணமாம் . 2 வருட காதலுக்காக 20 வருட பெற்றோர்உறவை எப்படித்தான் இழந்தானோ ? என்று எண்ணினாலும் 20 வருட உறவில் அவனையும் அவன் பெற்றோர் புரிந்து கொள்ளவில்லையோ
என்றுதான் பொதுபுத்தியில் தோன்றுகிறது.
என்றுதான் பொதுபுத்தியில் தோன்றுகிறது.
அதுதான் முடிந்துவிட்டதே , இனி என்ன பிரச்சனை என்று நான் கேட்கும் போதுதான் , அவன் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தது நியாபகம் வந்தது .நான் அப்போதுதான் அறிந்து கொண்டேன் அவன் அழுததன் காரணத்தை , கோவையில் எனக்கு தெரிந்த சில நண்பர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்து வேலை தொடர்பாக பேசுமாறு கூறினேன்.அவனும் சற்று ஆறுதலானான் .
நான் அடுத்த கேட்க நினைத்த கேள்வியை சற்று யூகித்திருப்பான் போல, அவனும் அவனின் வயதொத்த துணைவியும் அவனது அக்கா வீட்டில் அகதிகளாக இருப்பதாக கூறினான்.
விடு மச்சி எல்லா சரி ஆகிடும் என்று மறுபடியும் ஊசியை ஏற்றிவிட்டு, நீ அந்த நம்பர்க்கு கால் பண்ணி வேலையை பத்தி கேளு கண்டிப்பா வேலை கிடைக்கும் நான் நைட் உனக்கு கால் பன்றேன் என்று தொடர்பை துண்டித்தேன் .
அழைபேசி தொடர்பைதுண்டித்தும் அவன் நினைவே என் முன் நின்றது .
தங்குவதற்கு வீடு இல்லை , சம்பாதிக்க வேலையில்லை பிறகு எந்த தைரியத்தில் அதுவும் உறவுகளை எதிர்த்து திருமணம் செய்தான் இவன் , காதல் திருமணத்தை ஆதரிப்பவன் தான நான், இருந்தாலும் இதை ஆதரிக்க என் மனம் ஒப்புகொள்ளவில்ல.
இந்த நிலையில் இருந்துகொண்டு இருவரும் முன்னேறினால் உறவுகள் அவர்களை போற்றுவார்கள் , ஒரு வேளை வறுமையில் வாடினால் காதலை தூற்றுவார்கள்.
Comments
Post a Comment