இருட்டான உலகத்தில் இன்பமாய்
படுத்திருந்தேன்..
கண் கூட திறக்கவில்லை
காற்றோடு பேசி வந்தேன் ...
கால் கொண்டு உதைத்தாலும்
தடவியபடி சிரித்தாயே ...
காணாத என் முகத்தை
கற்பனையில் வரைந்தாயே ...
கருப்பான கருவுலகில்
திசை மாறி நின்ற போதும் ...
காற்றுப்பை கையில் கொண்டு
செவிலித்தாய் இழுத்த போதும் ...
கதறிய உன் கதறலுக்கு
கடவுளும் கலங்கி போவான் ...
கருணையில் கண்ணீர் வடிப்பான்
லேசான வெளிச்சத்தில்
வெளிவுலகம் தெரியுதம்மா ...
கண் மூடிய உன் முகமும்
காற்றோடு கலந்ததென்று
என் மனம் சொல்லுதம்மா ..
கண்ணீர் விட்டு அழுகுதம்மா ...
ம.பிரவின்
படுத்திருந்தேன்..
கண் கூட திறக்கவில்லை
காற்றோடு பேசி வந்தேன் ...
கால் கொண்டு உதைத்தாலும்
தடவியபடி சிரித்தாயே ...
காணாத என் முகத்தை
கற்பனையில் வரைந்தாயே ...
கருப்பான கருவுலகில்
திசை மாறி நின்ற போதும் ...
காற்றுப்பை கையில் கொண்டு
செவிலித்தாய் இழுத்த போதும் ...
கதறிய உன் கதறலுக்கு
கடவுளும் கலங்கி போவான் ...
கருணையில் கண்ணீர் வடிப்பான்
லேசான வெளிச்சத்தில்
வெளிவுலகம் தெரியுதம்மா ...
கண் மூடிய உன் முகமும்
காற்றோடு கலந்ததென்று
என் மனம் சொல்லுதம்மா ..
கண்ணீர் விட்டு அழுகுதம்மா ...
ம.பிரவின்
Comments
Post a Comment