கவிதையும் ரசிகனும்•••~•••
அழகான கவிதைகள்
ஆங்காங்கே சிதறி கிடந்தன ...
ஆங்காங்கே சிதறி கிடந்தன ...
கவி படைத்தவனும்
காவலுக்கு நின்று கொண்டிருந்தான் ...
காவலுக்கு நின்று கொண்டிருந்தான் ...
ஒரிரு கவிதைகள்
மட்டும் பார்த்தவுடன்
பற்றி கொள்ளும் ...
மட்டும் பார்த்தவுடன்
பற்றி கொள்ளும் ...
அதிலும் ஒரு சில கவிதைதான் என் விழிகளை வழிப்பறிச்
செய்யும் ...
செய்யும் ...
அந்த கவிதையை படிப்பதற்கே
பலநூறு வருடம்
தவம் கிடக்க வேண்டும் ...
பலநூறு வருடம்
தவம் கிடக்க வேண்டும் ...
நானும் பிற்கால கவி படைப்பவன் தான் என்றாலும்
இப்போது ரசிகன் என்ற முறையில் அந்த கவிதையை ரசித்தாக வேண்டிய கட்டாயம் ...
இப்போது ரசிகன் என்ற முறையில் அந்த கவிதையை ரசித்தாக வேண்டிய கட்டாயம் ...
அந்த அழகிய கவிதையை படைத்தவன் மட்டும் , அதை விட்டு மெல்லவெளியே நகர்ந்தான் ..
அந்த கவிதையின் எதிரே ரசிகனாக நான் மட்டும் .
கவிதையின் பெயர் அழைக்கப்பட்டது ..
அடுத்து ரசிகனாக என் பெயரும் அழைக்கப்பட்டது ...
மீண்டும் அந்த கவிதையின் எதிரே நான் மட்டும் ...
முடிவுகள் ஒட்டபட்டது ..
கவிதையின் பெயருக்கு கீழே ரசிகன் என்பதால் என் பெயரும் ஒட்டப்பட்டிருந்தது ..
வெளியே சென்ற அந்த கவிதையை படைத்தவன் ஒட்டப்பட்ட கவிதையின் பெயரை பார்த்தவுடன் ஆனந்தத்தில் திளைத்து கொண்டிருந்தான் ...
முடிவில் ,
அந்த கவிதையாக
அவளும்
அந்த ரசிகனாக
நானும்
அவளும்
அந்த ரசிகனாக
நானும்
ஒட்டப்பட்ட பெயர்களுடன் ஒரே நிறுவனத்தில் எங்கள் வேலையை தொடர்ந்தோம் ...
கவி படைத்தவனும் கவிதையை விடுதியில் விட்டுவிட்டு சொந்த ஊரை நோக்கி நகர்ந்தான்
கவிதையை தினமும் ரசித்து கொண்டே என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது ..
- ம.பிரவீன்
Comments
Post a Comment