எனது அறையில் என்னுடன் இருக்கும் நண்பர் ஒருவர் வெகுமாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தார் . அவரை போல் சுறுசுறுப்பான ஒருவரை நான் கண்டதில்லை. தினமும் ஏதாவது ஒரு இடத்திற்க்கு நேர்காணலுக்கு செல்வார் .
காலை முதல் மாலை வரை இடைவிடாத தேடல் பிறகு அறைக்கு வந்து அன்றாட பணிகளை செய்துவிட்டு அசதியில் உறங்குவார் . ஒரு நாள் என்றால் பரவாயில்லை கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் . போகும் இடமெல்லாம் பிறகு அழைக்கிறோம் என்ற ஆறுதல் பதிலே அவருக்கு மிஞ்சியிருந்தது. அவர் பொறியியலில் இயந்திரவியல் என்பது நான் அறிந்ததே.
அவரிடம் நிறைய முறை கேட்டுள்ளேன் உங்கள் துறையில் வேலை கிடைக்காமல் இவ்வளவு சிரமபடுவதற்கு பேசாமல் ஏதாவது சாப்ட்வேர் நிறுவனத்தில் முயற்சி செய்து பாருங்கள் என்று.. அவரும் இனி அப்படிதாங்க முயற்சி பண்ணனும் என்பார் .
ஆனால் மறுநாள் மறுபடியும் அவர் துறை சார்ந்த கம்பெனிக்கே வேலை தேடி அலைவார்.
படித்த படிப்பிற்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் பாதிக்கு பாதி வேலையின்றி அலைவார்கள் . படித்த படிப்பிற்கு உதவாத வேலையை செய்யும் தலைமுறையில் தான் இன்றளவும் நாம் இருந்து கொண்டிருக்கிறோம் . இன்றைய சூழலில் கிடைத்த வேலையில் ஓட்டிக்கொண்டு தான் நமது வருங்கால இலக்கை தீர்மானிக்க வேண்டும்.
காலையில் இதை பதிவு செய்துகொண்டே அவரை நோக்கினேன்
மீண்டும் அவர் துறை சார்ந்த ஏதோ ஒரு நேர்காணலுக்கு வேகமாக கிளம்பி கொண்டிருந்தார் .
மீண்டும் அவர் துறை சார்ந்த ஏதோ ஒரு நேர்காணலுக்கு வேகமாக கிளம்பி கொண்டிருந்தார் .
Comments
Post a Comment