இரவு 9 மணிக்கு அலரும் என் கைபேசி , தீடிரென்று காலை 11 மணிக்கு அலறியது. வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போது போனை எடுக்கலாமா , கூடாதா என்று கூட எனக்கு தெரியாது. அப்பாவின் நம்பர் ஆயிற்றே , சற்றும் யோசிக்கவில்லை எடுத்துவிட்டேன். "ஹலோ , ..." "நான் அம்மா பேசுறேன் சாமி" "சொல்லும்மா , இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க , அப்பா எங்க ? " "இல்ல சாமி , அப்பா கீழ விழுந்துட்டாரு , அத சொல்லலாமுன்னு தான் கூப்டேன் " "என்ன ஆச்சும்மா " என்று முடிப்பதற்குள்ளாகவே "கார்த்திக்" என்று ஒரு குரல் கர்ஜித்தது. ஏற்கனவே படப்படப்பில் இருந்த என் கைகள் தானாக சிவப்பு பட்டனை அமுக்கியது. என்ன செய்வதென்று புரியாமல் முகம் முழுதும் நனைந்தவனாய் மேலே பார்த்தேன். ஆம் , என் மேனேஜர் தான் நான் பார்த்ததும் " கம் டூ மை கேபின் " என்று கடுப்போடு உள்ளே நகர்ந்தார். அப்பாவிற்கு என்ன ஆனது என்று யோசிக்க கூட விடவில்லை.என் மனம் என்னிடம் இல்லை.என் அப்பாவின் நிலைமையை தேடி எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. "கார்த்தி , அ...