சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருகிறது ,ஆம் சாலைகள் எங்கும் ஹாரன் சத்தம் , இடைவிடாத போக்குவரத்து நெரிசல் , ரோட்டின் ஓரம் பூக்கடை வாசம் , டாஸ்மாக் முழுதும் அதே அடிதடி சண்டை , இவற்றை கண்டுகொண்டே கடந்து கொண்டிருந்தது என் இருசக்கர வாகனம்.
கிண்டியின் வழியே அடையாறுக்கு ஒரு பயணம் , வழியெங்கும் இன்னும் தூர்வாரபடாத குப்பைகள் , அந்த பகுதி மக்களுக்கோ , இல்லை அதே வழியில் பயணிக்கும் வாகனவாசிகளுக்கோ அது புதிதல்ல பல ஆண்டுகளாக இன்னும் மாறாத அதே நிலை , என்ன இந்த முறை மழை என்ற பெயரில் கொஞ்சம் அதிகம் அவ்வளவே...
வண்டியை ஓரம் கட்டிவிட்டு கொஞ்சம் மெதுவாக நடந்தேன் . கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரோ ஒருவர் சோகமான முகத்துடன் , ஆழ்ந்த சிந்தனையில் தனிமையை தனக்கானாதாய் கொண்டிருந்தார்.
அருகில் சென்று "அண்ணே என்ன ஆச்சு" என்று கேட்க தோன்றியது.இருந்தும் ஏதோ ஒரு தயக்கம் என்னை தடுத்தது. உண்மையில் தான் யார் என்றே தெரியாத ஒரு நபரிடம் என்னவென்று பேசுவது.
எப்படியோ மனது ஒரு நிலைக்கு வந்த பிறகு அவர் அருகில் சென்றேன்.
"அண்ணே என்ன ஆச்சு , சாப்பாடு எதாவது வேணுமா " என்றேன் .
அவர் " மெல்ல சிரித்துவிட்டு , அதெல்லாம் ஒன்னுமில்லப்பா , காலேஜ் பசங்க கொஞ்ச பேர் வந்து இப்ப தான் கொடுத்துட்டு போனாங்க " என்றார் .
சரி அண்ணே , என்று சொல்லிய என் உதடுகள் , மேலும் பேச துடித்து "வேற எதாவது உதவி வேணுமா அண்ணே " என்றது .
"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா , முப்பது வருசத்துக்கு முன்னாடி எப்படி மெட்ராஸ் வந்தனோ அப்படியே ஆகிட்டேன் ,
என்ன "அப்ப நான் மட்டும் இருந்தேன் இப்ப ரெண்டு குழந்தைகள் , அப்புறம் என் பொண்டாட்டி அவங்களும் என்ன நம்பி இருக்காங்க.
சரி விடு விதி யார விட்டுச்சு" என்றார் வேதனை நிரந்த குரலுடன்.
என்ன வேலை பாத்துட்டு இருந்திங்கனே , என்றேன்
மளிகை கடை வச்சிருந்தேன்பா , இப்ப எல்லாம் போய்டுச்சு
முப்பது வருசத்துக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாம மெட்ராஸ் வந்தேன்.
மளிகை கடைல வேலைக்கு சேர்ந்து , கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு , பத்து வருஷம் கலுச்சுதான் சொந்தமா ஒரு கடை போட்டேன்.
அதுவும் வாடைகைக்கு தான் , அப்புறம் கல்யாணம் , கொஞ்சம் நாள் என் பொண்டாட்டி வேலைக்கு போனா.
மொத குழந்த பொறந்ததுக்கு அப்புறம் நானே வேணாம் இன்னு சொல்லிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமா மேல வந்தோம் , "ரெண்டும் பொட்டபுள்ள வேறைய" அதுனால அப்ப அப்ப கொஞ்சம் நகை மட்டும் எடுத்து வச்சிருந்தோம்.
லாஸ்ட் அஞ்சு வருசமாவே கடைல ஒன்னும் வருமானம் வேற இல்ல , எல்லாரும் ஏதோ ஆன்லைன் ல வாங்குறாங்கஇன்னு சொல்றாங்க.
போன மாசம் தான் வீட்ல பேசிட்டு இருந்தோம் , இருக்கிற நகைய வச்சு மொத புள்ளைக்கு கல்யாணம் பண்ணலாம் இன்னு , சேர்த்து வச்ச நகை மொத்தமும் போச்சு ...
கடைல ஒரு பொருள் இல்ல , எல்லாமே போயிருச்சு
வாடகை வீடுதான் இருந்தாலும் எதோ கொஞ்சம் நல்ல படியா பொருள் வாங்கி வச்சிருந்தோம் , இப்ப உள்ள போய் பாத்தா எதையும் காணோம்..
முப்பது வருசத்துக்கு இருந்த தெம்பும் இப்ப இல்ல , ஒன்னும் புரியலப்பா .
கடன் வாங்கி மறுபடியும் கடை போட்டு நல்ல தரமான பொருள வித்தாலும் யாரும் இங்க வர மாட்டங்க , அது தான் ஆன்லைன்ல எல்லாமே கிடைக்குதே...
சரிப்பா , நான் வரேன் என்றவாரே ... மெல்ல நகர்ந்தார்..
மொத்தகதையையும் கேட்டதும்
என் கண்களுக்குள் ஏதோ நீர் சுற்றி கொண்டது ...
வெளியில் வர துடித்து கொண்டிருந்தது..
எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்..
Comments
Post a Comment