இரவு 9 மணிக்கு அலரும் என் கைபேசி , தீடிரென்று காலை 11 மணிக்கு அலறியது.
வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போது போனை எடுக்கலாமா , கூடாதா என்று கூட எனக்கு தெரியாது.
அப்பாவின் நம்பர் ஆயிற்றே , சற்றும் யோசிக்கவில்லை எடுத்துவிட்டேன்.
"ஹலோ , ..."
"நான் அம்மா பேசுறேன் சாமி"
"சொல்லும்மா , இந்த நேரத்துக்கு கூப்பிட்டிருக்க , அப்பா எங்க ? "
"இல்ல சாமி , அப்பா கீழ விழுந்துட்டாரு , அத சொல்லலாமுன்னு தான் கூப்டேன் "
"என்ன ஆச்சும்மா " என்று முடிப்பதற்குள்ளாகவே
"கார்த்திக்" என்று ஒரு குரல் கர்ஜித்தது.
ஏற்கனவே படப்படப்பில் இருந்த என் கைகள் தானாக சிவப்பு பட்டனை அமுக்கியது.
என்ன செய்வதென்று புரியாமல் முகம் முழுதும் நனைந்தவனாய் மேலே பார்த்தேன்.
ஆம் , என் மேனேஜர் தான்
நான் பார்த்ததும்
" கம் டூ மை கேபின் " என்று கடுப்போடு உள்ளே நகர்ந்தார்.
" கம் டூ மை கேபின் " என்று கடுப்போடு உள்ளே நகர்ந்தார்.
அப்பாவிற்கு என்ன ஆனது என்று யோசிக்க கூட விடவில்லை.என் மனம் என்னிடம் இல்லை.என் அப்பாவின் நிலைமையை தேடி எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.
"கார்த்தி , அவன் சரியான சிடுமூஞ்சி உடனே போய் பாத்துறு " என்றது என் நிலைமையறியா இருநாள் நண்பனின் குரல்.
வேறுவழியின்றி போனை கீழே வைத்துவிட்டு , உள்ளே சென்றேன்.
"ஆபிஸ் டைம்ல போன் use பண்ண கூடாதுன்னு தெரியாதா ? "
"இல்ல சார் , வீட்ல இருந்து கால் பண்ணிருந்தாங்க , அது தான் .... "
"வீட்டு சென்டிமென்டெல்லாம் இங்க கொண்டு வராத மேன் , ஆபிஸ் ரூல்ஸ் ய first follow பண்ணு "
"நீ இப்ப தான் joint பண்ணிருக்க , அதுநால தான் just warning ஓட விடுரேன்"
"ஓகே வா"
"ஓகே சார்" என்றேன் , என் அப்பாவின் சிந்தனையோடு.
வெளியே வந்ததும் என் கால்கள் வேகமாக cafeteria நோக்கி நடக்க துவங்கியது.
cafeteria வை அடைந்ததும். உடனே என் அப்பாவின் நம்பர்க்கு என் விரல்கள் கால் செய்தது , balance இல்லாததை மறந்து.
என்ன செய்வதென்றே புரியவில்லை , ஆயிரம் பேர் என்னை சுற்றி ஊர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அனைவரும் கையிலும் ஆன்ட்ராய்ட் மொபைல் தான் , நிச்சயம் அளவிற்கதிகமான balance இருக்கும்.
ஆனால் யாரிடம் கேட்பது , வேலையில் சேர்ந்து ஒருவாரம் தான் ஆகிறது அந்த அளவுக்கு நண்பர்களும் இல்லை.
ஒர் சிறு உதவியை கேட்க கூட கூச்சப்படும் தலைமுறையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எனக்கு நானே நொந்துகொண்டேன்.
எதுஎப்படியோ , என் அம்மா பேசிய பொழுது அவர் குரலில் ஒரு தெளிவு இருந்தது.அதனூடே அறிந்து கொண்டேன் அப்பாவிற்கு பெரிதாக அடி ஏதும் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று.
இருந்தும் என் மனது இன்னும் படப்படப்பில் தான் உள்ளது.
யாரிடமாவது கேட்க வேண்டுமே , யாரிடம் கேட்பது , என் நினைவில் உடனே வந்தது அந்த செக்யூரிட்டியின் முகம்தான்
"அண்ணே , ... "
"சொல்லுங்க சார் "
"ஒரு சின்ன Help ண்ணே "
"என்ன சார் , a.c level கம்மியா வைக்கனுமா ? "
"அது இல்லணே , ஒரு கால் பண்ணணும் , உங்க போன் தர்றீங்களா ? "
"அய்யோ , சார் balance இல்லைங்கலே , ஏதாவது emergency ங்களா ,office போன்ல வேணா பண்ணுங்க "
"இல்ல வேணாம்ணே , இப்ப தான் உள்ள போன் பேசுனதுக்கு மேனேஜர் திட்டுனாரு , office போன்ல பேசுனேன் தெரிஞ்சா அந்த ஆளு என்ன பண்ணுவார்ன்னே தெரியாது "
"சரி , விடுங்கண்ணே "
"சார் , ஒரு நிமிஷம் இருங்க .."
"வித்யா மேடம் , வித்யா மேடம் "
"அண்ணே எத்தனை டைம் சொல்லிருக்கேன் , மேடம் ன்னு கூப்பிடாதீங்கன்னு " என்று சினுங்கியது அந்த வித்யாவின் குரல்.
"அப்படியோ , பழகி போச்சும்மா "
" சரி , எதுக்குண்ணே கூப்பிட்டீங்க .."
"இல்ல மா , உங்க போன் தர்றீங்களா இவரு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரு , ஏதோ அவசரமா கால் பண்ணணுமா "
" இந்தாங்க ணா "
" சார் , இந்தாங்க "
போனை வாங்கியதும் விரல்கள் வேகமாய் என் அப்பாவின் நம்பரை தட்டியது.
எதிர்முனையில் அப்பாவின் குரல் , "ஹலோ , என்றது.
" அப்பா , நான் கார்த்திக் பேசுறேன்ப்பா "
"சொல்லுப்பா , இந்த டைம்ல கால் பண்ணிருக்க , வேலைக்கு போலையா , இது யாரு நம்பரு ? "
"இல்லப்பா , ஆபிஸ்ல தான் இருக்கேன் , உனக்கு ஏதோ அடிப்பட்டுருச்சுன்னு அம்மா கால் பண்ணுச்சு "
"கழுத , லேசா கண்ணசஞ்சேன் அதுக்குள்ள கால் பண்ணிட்டாலா , அது ஒன்னுமில்ல தம்பி , விறகொடிக்க மரமேறுனேன் கொஞ்சம் சறிச்சிறுச்சு , அவ்வளவு தான் ,நீ ஏதும் போட்டு குழப்பிக்காதைய்யா "
"சரி , சரி ப்பா நான் பயந்தே போய்ட்டேன் , சரி நைட்டு கூப்பிடுறேன் " என்றவாரே அழைப்பை துண்டித்தேன்.
போனிற்க்காக காத்திருந்த வித்யாவிடம் " ரொம்ப thanks ங்க " என்று போனை கொடுத்தேன் .
சிரித்து கொண்டே நகர்ந்து சென்றார்.
"அண்ணே , ரொம்ப
thanks ண்ணே "
thanks ண்ணே "
"சார் thanks எல்லாம் எதுக்கு சார் "
" சார் ன்னு கூப்பிடாதிங்கண்ணே , தம்பிண்ணே கூப்பிடுங்க " என்று சொல்லியவாரே உள்ளே சென்றேன்.
Comments
Post a Comment