முதல் வேலையின் , முதல் நாள் , பிரம்மிப்பாக இருந்தது.வானுயர்ந்த கட்டிடத்தின் காவலாளியை மட்டுமே பார்த்து பழகிய என் கண்களுக்குள் ஒரு கம்பீரம்.
என்னிடம் இருப்பதிலே புதிதான ஆடையை தான் அன்று அணிந்திருந்தேன்.ஆனால் அங்குள்ள ஆடைகளுக்கு மத்தியில் என் ஆடை ஆரிய கால பழையது போல் அழுக்காக தெரிந்தது.
சரி , உள்ளே செல்லலாம் என்று எனக்கான நடையில் மெதுவாய் நகர்ந்தேன்.
"சார் , கொஞ்சம் இருங்க , ப்ளீஸ் உங்க identity கார்டு ய காட்டுங்க ? என்றது கம்பீரமான அந்த காவலாளியின் குரல்.
"இல்லைங்க , இன்னைக்கு தான் First நாள் வேலைக்கு வந்திருக்கேன் , Identity card இனி தான் தருவாங்க" என்றேன் பணிவாக.
"எந்த கம்பெனி சார் ? "
"Secondworld Pvt Ltd "
"இல்ல சார் நாங்க Identity card இல்லாம உள்ள யாரையும் விட கூடாது , அட்லீஸ்ட் appoinment ஆர்டர் ஆவது வச்சிருக்கிங்களா ?
"ஹ்ம்ம் , அது இருக்கு " என்றவாரே எனது Appointment order ய காட்டினேன்.
"சரி சார் , நீங்க போங்க " என்றவாரே சிரித்து கொண்டே அனுப்பி வைத்தான்.
என் கால்கள் கம்பெனி வாயிலை தேடி கொண்டு ஊர்ந்து சென்றது. உள்ளே இருந்த தட்வவெப்பமும் , வினோத மனிதர்களும் விசித்திரமாய் இருந்தார்கள்.
என்னை யாரோ துரத்துவது போல் ஒரு உணர்வு , சுற்றிலும் ஆண் , பெண் அல்லாத 1000 உடல்கள் என் உடலை சூழ்ந்து கொண்டே மெதுவாய் நகர்த்தியது.
விரித்தாடும் கூந்தலையும் , அலைபேசியை அணைத்திருக்கும் விரல்களையும் பல முறை பார்த்தாலும் இன்று புதிதாக தான் உள்ளது.
என்னை அழைத்த அலுவலகத்தை நெருங்கிவிட்டேன். அட , ஆண்டவா , இங்கேயும் ஒரு காவலாளி , மறுபடியும் அதே கேள்வி ஆனால் ஆங்கிலத்தில் , நான் அங்கு சொன்ன அதே பதில் , ஆனால் அதே தமிழில்.
கல்லூரி காலத்தில் ஆங்கிலத்திற்கு என்றே தனியாக சிறப்பு வகுப்பெல்லாம் நடத்தினார்கள்.அதையெல்லாம் கண்டாலே காறி துப்பும் வர்க்கம் நான் , ஆனால் இன்று என்னை அந்த காவலாளி நிச்சியம் அவன் மனதுக்குள் துப்பி இருப்பான்.
முடிவாக ஒரு இருக்கையை காட்டி அங்கே அமர சொல்லிவிட்டு , உள்ளே யாரையோ பார்க்க சென்றான்.
நானும் ஒன்றும் புரியாதவனாய் அங்கே அமர்திருந்தேன்.
குளிரூட்டபட்ட அறை , மிதமான வெளிச்சம் , மயான அமைதி இதெல்லாம் நான் கண்டிராத புது அனுபவம்.முதல் முறை இந்த அனுபவம் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஆனால் மீண்டும் ரசிக்க தோன்றுமா ? என்று தெரிய வில்லை.
காவலாளி வெளியே வந்தார் " சார் உங்கள wait பண்ண சொன்னங்க எதோ மீட்டிங் நடக்குதாம்".
"ஹ்ம்ம் , okay " என்று எனக்கு தெரிந்த ஆங்கில புலமையை கொஞ்சம் காட்டினேன்.
"you r most welcome" என்று ஏதோ அவன் கூறினான்.
ஏதோ சொல்கிறான் , எனக்கு ஒன்றும் புரியவில்லை ,
"அண்ணே , எவ்வளவு நேரம் ஆகும் ? " என்று பம்பியவனாய் தமிழில் கேட்டேன் .
"தெரில சார் , ஆனா இன்னும் எப்படியும் 3 Hours ஆகும்" என்று சொல்லி கொண்டே அவர் வேலையை பார்த்துகொண்டிருந்தார்.
மீண்டும் அவர் சொன்ன அதே இடத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தேன்.காத்திருப்பு எனக்கு புதிதல்ல , இதற்கு முன் வரை எதிர்பார்ப்பின்றி காத்திருந்தேன் , ஆனால் இம்முறை எதிர்பார்போடு காத்துகொண்டிருகிறேன்.
ஏதோ ஏதோ சிந்தனைகள் மனதில் அலைபாய்ந்து கொண்டிருகிறது.என்னை பற்றி அல்ல என் அப்பாவையும் , அம்மாவையும் நினைத்து.
கால் தேய தேய உழைத்தாலும் இரவு நேரம் வந்தாலே என் காலை மெதுவாக பிடித்துவிடுவார். இரவு நான் உண்ணவில்லை என்று அறிந்தாலே தூக்கத்தில் தட்டி எழுப்பி "ஒரு வாய் , சாப்டுட்டு தூங்கு பா" என்று வாயிற்குள் திணித்திடுவார்.
அம்மாவோ இதற்க்கு ஒரு படி மேல் , நான் வைத்த மிச்சத்தையும் , பழையதென தூக்கி போடும் பண்டத்தையும் அவள் வயிற்றிற்குள் நிரப்பி கொள்வார்.
நான் ஏதும் கேட்டாலோ , "நல்லா தான சாமி , இருக்கு , இத போய் தூக்கி எறிஞ்சுட்டு " என்று என் வாயை அடைதிடுவார்.
அது எதுவும் இன்று வரை மாறவில்லை.என்னையும் சேர்த்து தான் ,
என் அப்பாவின் கால்களுக்கு கொஞ்சம் ஓய்வு , வித விதமாய் என் அம்மாவிற்கு வயிறார உணவு , அது போதும் , இதை மட்டுமாவது நிறைவேற்றிகொடு இறைவா ,
என்று சிந்தனையில் நனைந்தவனாய் உள்ளிருந்து வரும் அலைபிற்காக காத்திருந்தேன்.
Comments
Post a Comment