இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன்.
தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார்.
கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது .
இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம்.
எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன்.
அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன்.
இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார்.
யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார்.
அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது.
ஆனால் , எப்படியோ என் அம்மாவின் கோவில் கும்பிடுகளால் 4 1/2 வருடத்தில் முடித்து விட்டேன் என் கல்லூரி காலத்தை.
இதை சிந்தித்து கொண்டே டீ கடையை நெருங்கி விட்டேன்.அதற்குள்ளாக அலறியது எந்தன் கைபேசி ஆம் என் அப்பா தான் அலைகிறார்.
"அப்பா ....."
"சொல்லு தம்பி , சாப்டிய "
"இப்ப தான் பா சாப்டேன் , நீங்க ?"
"இல்ல பா , இப்ப தான் வந்தேன் இனிமேல் தான் சாப்டனும் , இனிக்கு போன வேலை என்ன ஆச்சு பா ?"
"அப்பா , அது சொல்றேன் இன்னு சொன்னங்க , ஆனா இன்னொரு கம்பனி ல வேலைக்கு வர சொல்லிட்டாங்க , வர திங்கள்கிழமை போய் சேரனும் "
"நல்ல கம்பெனி யா பா ?"
"ஆமா பா , கொஞ்சம் பெரிய கம்பெனி தான் , first 3 மாசம் ட்ரைனிங் அதுக்கு அப்புறம் 12,000 சம்பளம்"
"நல்லது பா , நீ படுச்சதுக்கு ஏத்த வேலை தான் ய ?"
"ஆமா பா , என்னோட படிப்புஇக்கு ஏத்த வேலை தா , இவ்வளவு நாள் அலைஞ்சு திரிஞ்சதுக்கு இப்ப தான் நல்ல வேலை கிடைச்சிருக்கு பா , அப்பவே கால் பண்ணலாம் இன்னு பாத்தேன் , போன் ல balance இல்ல அது தான்"
"நான் முதல்லையே சொன்னேன்ல உனக்கு நல்ல வேலை கண்டிப்பா கிடைக்கும் இன்னு , நீ தான் போட்டு குழப்பிட்டு இருந்த , சரி விடுப்பா எப்படியோ நம்ம குலசாமி புண்ணியத்துல உனக்கு ஒரு நல்ல வேல கிடைச்சிருச்சு "
"இரு உங்க அம்மா ட பேசு , என்று அம்மாவை எழுப்பினர்
"சாமி , ஏன் யா ரெண்டு நாளா போன் பண்ணவே இல்ல"
"இல்ல ம்மா அப்பா ட்ட பேசுனேன் , அவரு வெளிய இருக்கேன் இன்னு சொன்னாரு அது தான் பேச முடில "
"நீ என்ன பண்ற , அதுக்குள்ள தூங்கிட்டையா "
"இல்ல சாமி , தல வலியா இருந்துச்சு அது தான் கொஞ்சம் படுந்திருன்தேன் "
"அம்மா , எனக்கு வேலை கிடைச்சிருச்சு"
"ரொம்ப சந்தோசம் சாமி , என்ன வேலை "
"Application Analyst "
"ஏதோ சொல்ற ஒன்னும் புரியல சாமி , சரி சாப்டியா ?"
"இப்ப தான் சாப்டேன்"
"நீ சாப்டிய ?"
"இல்ல சாமி , இப்ப தான் அப்பா வந்தாரு இனி தான் சாப்டனும் "
"ஹ்ம்ம் , சரி ம்மா , நான் வைக்கட்டா "
"இருப்பா , உங்க அப்பா பேசனுமாம் "
"உம்ம்ம் , கொடு "
"தம்பி , இன்னைக்கு ஒரு 1000 ரூபாய் போட்டுருக்கேன் பா உன் sbi அக்கௌன்ட் ல "
"எதுக்கு பா , நான் ஏதும் கேக்கவே இல்லையே ?"
"இல்ல பா , எதாவது அவசரம் னா எடுத்துக்கோ , இப்ப இன்னொரு டைம் கூட போய் சாப்டுட்டு தூங்கு"
"ஹ்ம்ம் , சரி பா " என்று அழைப்பை துண்டித்தேன்.
அண்ணா , ஒரு டீ னா என்று சொல்லிகொண்டே சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்.பெற்ற வயிறுக்கும் , சுமந்த தோலுக்கும் தெரிந்திருகிறது நான் இன்னும் உண்ணவில்லை என்று , அதை மறைமுகமாய் அவர்கள் போட்டுவிட்ட 1000 ரூபாய் உணர்வாய் உணர்த்துகிறது.
மெதுவாக , டீ யை சுவைத்து கொண்டே வருங்கால கனவுக்குள் முதல் அடி எடுத்து வைத்தேன்.
Comments
Post a Comment