Skip to main content

ஏன் இந்த எல் நினோ ?

எல்லாரும் எல் நினோ எல் நினோ என்று புலம்பிகொண்டிருக்கும் வேளையில்  அதை பற்றிய ஒரு சிறு தகவல்.

ஏன் இந்த பெயர் ?

எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.

எதனால் இந்த எல் நினோ ?

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது.

எல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.

எல்  நினோவின் வரலாறு

முக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.

கிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.

மேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும் இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.


400 வருடங்களுக்கு முன்பே

எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.

இந்த எல் நினோ விவகாரம் 400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தென் அமெரிக்க மீனவர்கள் கடல் பகுதியின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதை அப்போதே கண்டுபிடித்தனர். இப்போது உலகின் பல நாடுகளையும் சேர்ந்த அதி நவீன செயற்கைக் கோள்கள் இந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன.

இஸ்ரோவும் நாஸாவும்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தனது Global Precipitation Measurement (GPM) mission திட்டத்தின் கீழ் வரும் இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் உள்பட உலகின் டாப் 12 வானிலை ஆய்வு செயற்கைக் கோள்கள் தந்த டேட்டாவை வைத்து கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகெங்கும் நிலவிய கடல் பகுதி வெப்பத்தின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் தமிழகத்தை சுற்றியுள்ள வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக, அதாவது ரெக்கார்ட் அளவில் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பல விவரங்களை நாஸாவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம் என இஸ்ரோ கூட கூறுகிறது.

இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இன்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாஸாவின் பல செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன. இது குறித்து நாஸாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும். இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை. ஆனால், இந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Comments

Popular posts from this blog

பனியோடு ஓர் நாள்

பனிவிழும் நேரத்தில் அதிகாலை ஈரத்தில் தனியே ஓர் பயணம். பண்டைய கால சித்திரம் போல பனிக்கு பயந்து கைகளை கட்டிக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன். யாருமில்லா சாலை அது , மரங்களும் செடிகளின், அந்த இரு இலைகளும் கூட ஆங்காங்கே மறைந்து தான் வளர்ந்திருந்தது. பெண்ணை பார்க்கா உதடுகள் கூட ஏனோ முதல் முறை பார்த்தது போல உற்சவத்தில் ஆடிக்கொண்டிருந்தது. நான் அணிந்திருந்த கண்ணாடிக்குள்ளும் பனியின் ஊடுருவல். எதிரே பெரியாரின் சிலையும் கண்ணாடி அணிந்த படி சிரித்துக் கொண்டிருந்தது. வெள்ளை புகைக்குள் என் உ தடுகள், முன் சண்டையிட்டு பின் சமாதானம் பேசிக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு முண்டாசு கவிஞனின் நினைவாக தலைக்கும் காதிற்கும் முடிச்சு போடும் பாழடைந்த கம்பளி வேறு. நீல வான மேகத்தை ரசித்த படி மேலும் நகர, நீல வண்ண உடையணிந்த அம்பேத்கரின் சுவரொட்டி அழுக்காய் சுவற்றின் ஓரம் கேட்பாரற்றுகிடந்து. காவி கரைபடிந்த கட்டிட குவியலுக்குள் அதிகாலையில் தலைப்பாகை கட்டிய என் பயணம் , ஏதோ பல ஏக்கர் வயல் பரப்பிற்க்குள் விவசாயம் செய்ய கிளம்பும் உழவனை போல் இருந்தது தான், நிகழ்கால சிரிப்பின் உச்சக்கட்டம். நேரம் ஆக ஆக வெள்ள...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...