நான்குநாட்களாக கோமா நிலையில் இருந்த அவன் கைபேசிக்கு அன்று தான் அரைகுறையாய் நினைவு வந்தது.
மனதிற்குள் குதூகலம் அவன் விரல்கள் அவனுக்கானவளின் எண்ணை தான் முதலில் தட்டியது.
நிச்சயம் தெரியும் கடந்த போன இந்த நான்கு நாட்களில் அவள் அவனுக்கான அழைப்புக்காக ஏங்கி தவித்திருப்பாள்.
கிராதகி அவன் அழைத்த முதல் ரிங்கிலே எடுத்துவிட்டாள்.
ஹலோ , எங்கடா இருக்க ? ஏன்டா கால் பண்ணல ? ஏதும் ப்ரச்சன இல்லையே ? ரொம்ப மழை , வெள்ளம்ன்னு சொன்னாங்க என்னடா ஆச்சு என்றாள் நனைந்த குரலுடன்.
அவன் கொஞ்சம் கரைந்தே போய்விட்டான்.
"லவ் யூ டி"
"லவ் யூ சோ மச்"
என்ற வார்த்தையிலே அவளுக்கான பதிலை உதிர்த்துவிட்டான்.
"லவ் யூ சோ மச்"
என்ற வார்த்தையிலே அவளுக்கான பதிலை உதிர்த்துவிட்டான்.
"சாப்டையா டா" அவள்.
"உன்ன பாக்கனும் போல இருக்கு டி" அவன்
"நீ சாப்டையா டி" அவன்.
"உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் சாப்புடனும்" அவள்.
ஐ லவ் யூ சோ மச் டி
மிஸ் யூ என்று முடிப்பதற்குள்ளாகவே கைபேசி மீண்டும் கோமா நிலையை அடைந்தது.
மிஸ் யூ என்று முடிப்பதற்குள்ளாகவே கைபேசி மீண்டும் கோமா நிலையை அடைந்தது.
அமர்ந்த இடத்தில் அசையாமல் கைபேசியின் உயிரை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தான் அந்த அடைமழையிலும்.
எதிர்முனையில் , கைபேசியில் உள்ள அவனின் புகைபடத்தை பார்த்துகொண்டே வியப்போடு விழித்திருந்தால் அவனின் அழைப்புக்காக..
Comments
Post a Comment